தமிழ்நாட்டின் பிரபல தொழில் அதிபராக விளங்குபவர் சுரேஷ்சம்பந்தம். கடந்த சில ஆண்டுகளில் இவரது நிறுவனம் பன்மடங்கு வளர்ச்சியடைந்துள்ளது. மேலும், இவரது பேச்சு இளைஞர்கள் பலருக்கும் உத்வேத்தை தருவதாக அமைந்துள்ளது.
இந்த நிலையில் இவரது கிஸ்ப்ளோ நிறுவனத்தின் ஊழியர்களுக்கு சுரேஷ் சம்பந்தம் சார்பில் அன்பளிப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவரது நிறுவனத்தின் தொடக்க காலம் முதல் அவரது நிறுவனத்தில் பணியாற்றியவர்களுக்கு அதாவது சென்னையைச் சேர்ந்த தனது கிஸ்ப்ளோ தலைமை குழுவிற்கு சுரேஷ் சம்பந்தம் விலையுயர்ந்த பி.எம்.டபுள்யூ காரை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.
இந்த காரை அன்பளிப்பாக வழங்கிய பிறகு பேசிய சுரேஷ் சம்பந்தம், இவர்கள் அனைவரும் என்னுடனே தங்கியவர்கள். இவர்கள் இல்லாமல் கிஸ்ப்ளோ இன்று இந்த இடத்தில் இருந்திருக்காத. இது ஒரு மிகச்சிறிய பாராட்டுக்கான அடையாளம் ஆகும்.”என்று கூறினார். சுரேஷ் சம்பந்தம் பி.எம்.டபுள்யூ காரையே பரிசாக வழங்கியதால் அந்த ஊழியர்கள் நெகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும், பலரும் சுரேஷ் சம்பந்தத்தை பாராட்டி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்