KFin டெக்னாலஜிஸ்
டிஜிட்டல் ஃபைனான்ஷியல் சேவை நிறுவனமான KFin டெக்னாலஜிஸ் நிறுவனம் டிசம்பர் 19-ஆம் தேதி தனது பொது பங்கு வெளியீட்டை செய்தது. இது டிசம்பர் 21-ஆம் தேதி அன்று முடிவடைந்தது. தொழில்நுட்பம் சார்ந்த நிதி சேவை வழங்கும் நிறுவனமான கேபின் டெக்னாலஜிஸ் இந்த மாதத்தில் நான்காவது நிறுவனமான ஐபிஓ வெளியிட்டது. ஏற்கனவே sila vineyards. abans holdings, landmark car ஆகிய நிறுவனங்கள் ஐபிஓ வெளியிட்டுள்ளது.
ரூ.1,500 கோடி திரட்ட முடிவு
டிசம்பர் 19-ஆம் தேதி தொடங்கும் கேபின் டெக்னாலஜிஸ் ஐபிஓ டிசம்பர் 21-ஆம் தேதியுடன் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டது. ஜெனரல் அட்லாண்டிக் சிங்கப்பூர் ஃபண்ட் பிரைவேட் லிமிடெட் மூலம் விற்பனைக்கான சலுகையை மட்டுமே உள்ளடக்கிய பொது வெளியீட்டின் மூலம் 1,500 கோடியை திரட்ட அந்நிறுவனம் திட்டமிட்டது. விற்பனை செய்யும் பங்குதாரர் அனைத்து வருமானத்தையும் பெறுவார் என்றும், ஐபிஓ வெளியீட்டின் மூலமாக நிறுவனம் எந்த தொகையும் பெறாது என்று கூறப்பட்டது.
இந்த ஜெனரல் அட்லாண்டிக் சிங்கப்பூர் ஃபண்ட் பிரைவேட் லிமிடெட் தகுதி வாய்ந்த நிறுவன வாங்குபவர்களுக்கு சலுகைப் பகுதியில் 75 சதவீதத்தை ஒதுக்கியுள்ளது. அதிக மதிப்புள்ள தனிநபர்களுக்கு 15 சதவீதமும், சில்லறை முதலீட்டாளர்களுக்கு 10 சதவீதமும் ஒதுக்கப்பட்டது.
ஐபிஓ முடிவு என்ன?
KFin டெக்னாலஜிஸ் நிறுவனம் பொதுப் பங்கின் வெளியீட்டின் போது, உள்நாட்டு சந்தையில் அதன் பங்கு சீராக துவங்கியது. இந்த வெளியீட்டில் ஒரு பங்கின் விலையானது ஒரு பங்குக்கு 347-366 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டது. அதன்படி, பொது பங்கு வெளியீட்டின் போது, மும்மை பங்குச் சந்தையில் 3 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.
மேலும் கேபின் டெக்னாலஜிஸ் நிறுவனம் ஐபிஓ மூலம் 1,500 கோடி ரூபாய் திரட்ட முடிவு செய்தது. அதன்படி, தகுதிவாய்ந்த நிறுவனங்களை சேர்ந்த முதலீட்டாளர்கள் அதிக வட்டியை செலுத்தி, ஏலத்தில் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட பங்குகளை வாங்கினர். மேலும், ஒதுக்கப்பட்டாத நிறுவனங்கள் ஐபிஓயில் 23 சதவீதம் சந்தா தொகையை பங்குதாரர்கள் செலுத்தி பங்குகளை வாங்கினர்.
ரூ. 1,500 கோடி மதிப்பில் ஐபிஓ ஏலங்களுக்கு முடிவடைந்த நேரத்தில் 2.59 மடங்கு முழுமையாக சந்தா செலுத்தப்பட்டது. தகுதிவாய்ந்த நிறுவன வாங்குபவர்கள் (QIBs) அதிக வட்டியைக் காட்டி, அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட பகுதிக்கு 417% ஏலம் எடுத்தனர், அதே சமயம் சில்லறை முதலீட்டாளர்கள் 1.36 மடங்கு சந்தா செலுத்தினர். நிறுவனம் சாராத முதலீட்டாளர்கள், வெளியீடு முடிவதற்குள் அவர்களது ஒதுக்கீட்டில் 23% மட்டுமே சந்தா செலுத்தப்பட்டதால் மந்தமான நிலையில் இருந்தது என்பது கணிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.