HDFC Insurance: காப்பீடை தேர்வு செய்யும்போது எதை வாங்கலாம், எதை தவிர்க்கலாம்? என்பது குறித்து கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement


காப்பீடின் அவசியம்:


உங்கள் முதல் வேலை என்பது வாழ்க்கையில் உண்மையான சுதந்திரத்தின் முதல் படியாகும். நீங்கள் உழைத்துப் சம்பாதிக்கும் பணம்,  அதிலிருந்து நீங்கள் சேமிப்பது என்பது உங்கள் எதிர்க்கால பயணத்தின் தொடக்கம் என்று சொல்லாம். ஆனால் இந்த உற்சாகத்தின் நடுவே, ஆரம்பக் கால நிதி முடிவுகள் தான் உங்கள் எதிர்கால வாழ்க்கைக்கு அடித்தளமாக மாறுகின்றன. இப்படி சரியான  நிதி அமைப்பை கட்டி உருவாக்கினால் தான் அது எதிர்காலத்தில் எந்த சவாலாக இருந்தாலும் உங்களுக்கு பாதுகாப்பை அளிக்கும். அந்த வலுவான தொடக்கத்திற்கான புத்திசாலித்தனமான முதல் படியாக இருக்க வேண்டியது நல்ல காப்பீடு திட்டமாகும். அது தான் உங்கள் நிதி பாதுக்காப்புக்கு வலையமைப்பாக இருக்கும்.


டெர்ம் இன்சூரன்சுடன் தொடங்குங்கள்:


இளம் வயதில், உடல் ஆரோக்கியமாகவும், தொழில் வாழ்க்கையின் தொடக்க நிலையிலும் இருக்கும் போது, காப்பீடு அவசரத் தேவையாகத் தெரியாமல் போகலாம். ஆனால் அதுவே அதை வாங்குவதற்கான சிறந்த நேரம் என்று சொல்லலாம். டெர்ம் இன்சூரன்ஸ் குறைந்த பிரீமியத்தில் அதிக பாதுகாப்பு அளிக்கும். இளம் வயதில் வாங்கினால், அந்தக் குறைந்த பிரீமியம் வாழ்க்கை முழுவதும் நிலைத்திருக்கும்.


இதை நீண்ட கால பாதுகாப்புக் கவசமாக (Long Term Goals) நினைத்துக்கொள்ளுங்கள்,  இது எதிர்பாராத நிதி சிக்கல்களிலிருந்து உங்கள் குடும்பத்தினரை காப்பாற்றும். நீங்கள்  திருமணம் ஆகாதவராக இருந்தாலும் கூட, இணை கடன்கள், குடும்ப பொறுப்புகள் அல்லது உங்களை நம்பி இருப்பவர்களுக்கான  பாதுகாப்பை இது வழங்கும்.


சரியான rider-களை தேர்வு செய்க:


டெர்ம் இன்சூரன்ஸை வாங்கிய பிறகு, அதனை சரியான ரைடர்கள் (Riders) மூலம் மேலும் வலுப்படுத்தலாம். உதாரணமாக, கிரிட்டிக்கல் இல்னஸ் ரைடர் (Critical Illness Rider) பெரும் நோய்கள் வந்தால் நிதி உதவி வழங்கும்;.அக்சிடென்டல் டிஸபிலிட்டி ரைடர் (Accidental Disability Rider) விபத்தால் உங்களின் வருமான திறன் பாதிக்கப்பட்டாலும் நிதி நிலைமையை சரியாமல் பார்த்துக் கொள்ளும்.
இவை குறைந்த செலவில் அதிக நன்மை தரும் சிறந்த விருப்ப தேர்வுகள் ஆகும்


குழப்பமான, விலையுயர்ந்த  திட்டங்களை தவிர்க்கவும்


“இன்சூரன்ஸ் பிளஸ் முதலீடு” என வாக்குறுதி அளிக்கும் திட்டங்கள் பலருக்கு முதலில் ஒரு ஈர்ப்பை ஏற்ப்படுத்தலாம். ஆனால் உங்கள் தொழில் வாழ்க்கையின் தொடக்கத்தில் சிக்கலற்ற, பயனுள்ள திட்டங்களில்தான் கவனம் செலுத்த வேண்டும். எண்டோமெண்ட், மனி பேக் போன்ற பண்டில் திட்டங்கள் உங்கள் பணத்தை நீண்ட காலத்திற்கு முடக்கிவிடும், அதே சமயம் குறைந்த வருமானத்தையும் வழங்கும். இந்த கட்டத்தில், உங்கள் முக்கிய இலக்கு முதலில் பாதுகாப்பை உருவாக்குவது, பின்னர் வளர்ச்சியை நோக்கிச் செல்லுவது ஆகும். காப்பீட்டை முழுமையாக பாதுகாப்பிற்காக மட்டுமே வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் வருமானம் நிலையாகியதும் மற்றும் அவசரத் தேவைக்கான அடிப்படை நிதி சேமிப்பு உருவான பிறகே முதலீடுகளை ஆராயுங்கள்.


வருமானம் நிலையானதும் சேமிப்புத் திட்டங்களுக்கு நகருங்கள்:


உங்கள் வருமானம் அதிகரிக்கும் போது, பாதுகாப்பும் உறுதியான வருமானமும் ஒன்றாக வழங்கும் உறுதியான சேமிப்பு திட்டங்களை (Guaranteed Savings Plans) ஆராய ஆரம்பிக்கலாம். இத்தகைய திட்டங்கள் நீண்டகால இலக்குகளை — உதாரணமாக வீடு வாங்குவது, உயர் கல்விக்கான நிதி ஏற்பாடு செய்வது, அல்லது முன்கூட்டியே நிதி சுதந்திரம் பெறுவது — ஆகியவற்றை எளிதில் திட்டமிட உதவும். HDFC Life Sanchay Plus போன்ற திட்டம், உறுதியான நன்மைகள் மற்றும் நிலைத்தன்மையை விரும்பும் தொழில்முனைவோருக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது உங்கள் பணத்தை முறைப்படியாக வளரச்செய்யும், இதனால் நீங்கள் உங்கள் தொழில் வளர்ச்சியிலும் அல்லது வியாபார விரிவாக்கத்திலும் முழு கவனம் செலுத்த முடியும்.


என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?


நிலையான வருமானம்: 10, 12, 25, 30 ஆண்டுகள் அல்லது வாழ்நாள் முழுவதும் நிலையான மற்றும் முன்னறிவிக்கக்கூடிய வருமானத்தை உறுதி செய்கிறது.


வரி சலுகைகள்: நடைமுறையில் உள்ள வரி சட்டங்களின்படி வரிச்சலுகைகள் (Tax Benefits) கிடைக்கும் — இதனால் உங்கள் எதிர்காலத்திற்கான சேமிப்பு மேலும் அதிகரிக்கும்.


மொத்த பிரீமியம் திருப்பி வழங்கல்: தொகுப்பு காலம் முடிவில் நீங்கள் செலுத்திய மொத்த பிரீமியம் முழுமையாக திருப்பி வழங்கப்படும் — இதனால் உங்கள் பணம் முழு சுற்று முடிந்து மீண்டும் உங்களிடமே வரும்.


எதற்காக டெர்ம் இன்சுரன்ஸ்?


காப்பீடு என்பது வெறும் நிதி சார்ந்த அபாயங்களை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதற்காக மட்டுமல்ல, அது மன அமைதியை உருவாக்கும் ஒரு வழி ஆகும். புதிய தொழில்முனைவோருக்கு, டெர்ம் இன்சூரன்ஸ் மூலம் தொடங்குவது ஒரு வலுவான நிதி அடித்தளத்தை அமைக்கும் முதல் படியாகும். உங்கள் தொழில் வளர்ச்சியடையும்போது, நீண்டகால இலக்குகளை நிறைவேற்ற உதவும் உறுதியான சேமிப்பு திட்டங்கள் (Guaranteed Savings Plans) மூலம் அந்த அடித்தளத்தை விரிவுபடுத்தலாம். HDFC Life Sanchay Plus உங்கள் வாழ்கைக்கான அடுத்த நம்பிக்கையான படியை எடுக்க உதவுகிறது.


பொறுப்பு துறப்பு:


இது ஒரு ஸ்பான்சர் செய்யப்பட்ட கட்டுரை, ABP Nadu இதன் உள்ளடக்கம் அல்லது இதில் வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்களை ஒப்புக்கொள்வதில்லை. வாசகர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப இதனைப் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்.