தூத்துக்குடி மாவட்ட இயக்க மேலாண்மை பிரிவில் உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணியிட விவரம்
வட்டார ஒருங்கிணைப்பாளர்
கல்வித் தகுதி
இதற்கு விண்ணப்பிக்க இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினி அறிவு, எம்.எஸ். ஆபிஸ் தெரிந்திருக்க வேண்டும்.
மக்கள் அமைப்பு சார்ந்த திட்டங்களில் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
இதற்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
ஊதிய விவரம்
இது ஒப்பந்தம் அடிப்படையிலான பணி என்பதால் மாத தொகுப்பூதியமாக ரூ.12,0000 வழங்கப்படும்.
தெரிவு செய்யப்படும் முறை:
இதற்கு பெறப்படும் விண்ணப்பங்களில் இருந்து தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்க வேண்டிய முறை
கல்வித் தகுதி, கணினி பயிற்சி பெற்றதற்கான சான்று முன்னுரிமை சான்று ஆகியவற்றின் நகல்களை இணைத்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை அஞ்சல் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
இணை இயக்குநர் / திட்ட இயக்குநர்
தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம்
மாவட்ட இயக்க மேலாண்மை பிரிவு
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், இரண்டாவது தளம்
கோரம்பள்ளம்
தூத்துக்குடி - 628101
விண்ணப்பிக்க கடைசி தேதி - 25/10/2023
தூத்துக்குடியில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது Protection Officer பணிக்கு தொகுப்பூதியம் அடிப்படையில் ஓராண்டு காலத்திற்கு ஒப்பந்தத்தத்தின் மூலம் நிரப்பப்பட உள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி விவரம்
இதுகுறித்து வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், தமிழ்நாடு அரசு சமூகப் பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும் வாட்சாலயா (Mission Vatsalya) வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி மாவட்ட ஆட்சித்தலைவரின் கீழ் இயங்கி வரும், தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு குழந்தை மனநல ஆலோசகர் (Counsellor) பணிக்கு தற்காலிக பணியிடத்தினை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
இந்தப் பதவிக்கு மாதம் ரூ.27,804/- தொகுப்பூதியம் ஓராண்டு கால ஒப்பந்தத்திற்கு 42 வயதிற்குட்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பட்டதாரி / முதுநிலை பட்டதாரிகள் (10+12+3 Pattern) உளவியல், சமூகவியல், சமூகப்பணி, பொது சுகாதாரம், வழிகாட்டுதல் உள்ளிட்ட படிப்பு முடித்தவர்களாக இருத்தல் வேண்டும் அல்லது முதுநிலை பட்டயப்படிப்பு (PG Diploma in Counseling and Communication) பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எப்படி விண்ணப்பிப்பது?
இந்தப் பதவிகளுக்கு தேவையான ஆவணங்களுடன், பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை அஞ்சலில் அனுப்ப வேண்டும்.
http://www.thoothukudi.nic.in/ - என்ற இணையதள முகவரியில் இருந்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
முகவரி:
District Child Protection Officer
District Child Protection Unit
176, Muthusurabi Building
Mani nagar 2nd street, Palai Road
Thoothukudi 628 003.
தொடர்புக்கு- 0461 -2331188
விண்ணபிக்க கடைசித் தேதி: 31.10.2023 மாலை 5.30 மணிக்கு