அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஃபர்ஸ்ட் சோலார் நிறுவனம் இந்தியாவில் சென்னையை அடுத்துள்ள திருப்பெரும்புதூரில் பிள்ளைப்பாக்கம் சிப்காட்டில், இந்தியாவில் தனது முதல் உற்பத்திப் பிரிவை நிறுவி, உற்பத்தியைத் தொடங்கியுள்ளது. தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் டி .ஆர்.பி ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொழிற்சாலையை துவக்கி வைத்து தொழிற்சாலையும் உற்பத்தியையும் பார்வையிட்டார். இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இதனையடுத்து செய்தியாளரை சந்தித்த அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்ததாவது: இந்தியாவிலேயே மிகப்பெரிய சோலார் தயாரிப்பு தொழிற்சாலை திறக்கப்பட்டுள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த நிறுவனத்தில் 20பிஎச்டி முடித்தவர்கள் பணிபுரிகிறார்கள். அதில் 40% அதிகமானோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் கேட்பது கிடைக்கின்றது என அதிகாரிகள் பெருமையுடன் கூறுகிறார்கள். 15 மாதங்களில் இந்த நிறுவனம் கட்டிமுடிக்கப்பட்டு உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. இந்த உற்பத்தி ஆலையில் சுமார் 70% உபகரணங்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன.
மீதமுள்ளவற்றையும் இங்கே உற்பத்தி செய்வதற்கான பணியை தமிழக தொழில்துறை முன்னெடுத்து வருகிறது. மிக மிக முக்கியமான உபகரணங்களை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இது குறித்து முழு தகவலை தற்போது கூற முடியாது என தெரிவித்தார். ஒரு உற்பத்தி நிறுவனம் தமிழ்நாட்டிற்குள் வந்தால் அந்த உற்பத்தி நிறுவனத்திற்கு தேவையான அனைத்து மூல பொருட்களும் தமிழ்நாட்டில் இருந்தே உற்பத்தி செய்யப்பட வேண்டும். அவ்வாறு நடைபெற்றால் அது அந்த நிறுவனத்திற்கும் நல்லது இங்கு இருக்கும் இளைஞர்களுக்கும் வேலை கிடைக்கும் என தெரிவித்தார்.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் இந்த ஆலையை தமிழ்நாடு முதலமைச்சர் துவக்கி வைத்தார் தற்போது நேரடியாக வந்து நாங்கள் துவக்கி வைத்திருக்கிறோம் என கூறினார். தமிழ்நாட்டு முதலீட்டாளர் மாநாட்டை விட குஜராத்தில் சிறப்பாக உள்ளது என அண்ணாமலை விமர்சனம் செய்ததற்கு குறித்து பதில் அளித்து பேசுகையில், இங்கு இருக்கும் முதலீடுகளின் தரத்தை பாருங்கள். இங்கிருக்கும் வேலை வாய்ப்பின் தரத்தை பாருங்கள் இதை அவர்கள் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாது. தமிழ்நாட்டிற்கும் அதற்கும் உள்ள வித்தியாசம் வானத்திற்கும் பூமிக்கும் உள்ள வித்தியாசம். தமிழ்நாட்டை புரிந்து கொண்டு அவர்கள் பேச வேண்டும் என விமர்சனம் செய்தார்.
உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை என கேள்வி அது எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து பேசுகையில், உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு கொடுப்பதை தான் நிறுவனமும் விரும்பும் ஏனென்றால் அதுதான் அவர்களுக்கு பொருளாதார ரீதியில் பலன் கொடுக்கும். அதே போன்று இந்த நிறுவனத்தில் தமிழ்நாட்டில் இருந்து பலரும் வேலை செய்கிறார்கள். நான் முதல்வன் திட்ட மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து குறிப்பாக திருநெல்வேலியில் இருந்து இளைஞர்களுக்கு வேலை இந்த நிறுவனத்தில் கிடைத்துள்ளது. எங்கள் தேவைக்கேற்ப இளைஞர்கள் மற்றும் மாணவர்களை திறனை மேம்பாடு செய்து பயிற்சி அளிப்பது எங்களுக்கு உதவியாக இருக்கிறது என பெருமையாக கூறிவிட்டு செல்கின்றனர்.
இதெல்லாம் தான் தமிழ்நாட்டிற்கு பெருமை. முதல்வரின் நான் முதல்வன் திட்டத்திற்கு கிடைத்த வெற்றி இது என கூறினார் மேலும் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாடு உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் அமைந்து உள்ளது மேலும் பல்வேறு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் செய்ய வந்து கொண்டிருக்கின்றன இது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் கற்கும் தமிழ்நாட்டிற்கும் கிடைத்த மிகப்பெரிய பெருமை வரும் காலங்களில் தமிழன்டா என்று தமிழ்நாட்டை திரும்பிப் பார்க்கும் வகையில் தொழில் உற்பத்தி மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் எனவும் கூறினார்