வாரத்தின் முதல் நாளான நேற்று கொரோனா அதிகரிப்பால், இந்தியப் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியுடன் தொடங்கியது. நேற்று சரிவைக் கண்ட மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகள் இன்று ஏற்றம் கண்டன. வாரத்தின் இரண்டாவது நாளா இன்று மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 300, தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 100 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்துள்ளது. நேற்று சென்செக்ஸ் 1,700, நிஃப்டி 500 புள்ளிகளுக்கு மேல் சரிவை கண்டதால் ரூ.8.80 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.




தற்போதைய நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 295.82 புள்ளிகள் அதிகரித்து 48,179.20 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. இதேபோல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 79.05 புள்ளிகள் அதிகரித்து 14,389.85 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.