யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) மூலம் இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் பரிவர்த்தனைகள் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 10.73 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதுவரை இல்லாத அளவில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 657 கோடி முறை யுபிஐ பரிவா்த்தனைகள் நடைபெற்றுள்ளதாக தேசிய பணப்பரிவர்த்தனை இந்தியக் கழகத்தின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. 


யுபிஐ பரிவர்த்தனை


ஆண்டுக்கு ஆண்டு, யுபிஐ பரிவர்த்தனை 100 சதவீதம் அதிகரிப்பதாகவும், பரிவர்த்தனை செய்யப்படும் பணத்தின் அளவு 75 சதவீதம் அதிகரிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. பணப்பரிமாற்றம் செய்யப்படும் சராசரி தொகையின் மதிப்பும் அதிகரித்திருப்பதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் தரவுகளின்படி, ஆகஸ்ட் மாதத்தில் நாடு 657 கோடி UPI பரிவர்த்தனைகளைப் பதிவு செய்துள்ளது. இது ஜூலை மாதத்தில் 628 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஜூன் மாதத்தில், 10.14 லட்சம் கோடி மதிப்பிலான 586 கோடி பரிவர்த்தனைகள் நடந்தன. இப்படி மாதம் மாதம் பரிவர்த்தனைகள் எண்ணிக்கையும், பணமும் அதிவரித்து வருகிறது.



ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனை


இது தவிர, உடனடி பரிமாற்ற அடிப்படையிலான ஐஎம்பிஎஸ் ஆகஸ்ட் மாதத்தில் 46.69 கோடி பரிவர்த்தனைகளுடன் ரூ.4.46 லட்சம் கோடி மதிப்பிலான பரிவர்த்தனைகளை பதிவு செய்துள்ளது. ஜூலை மாதத்தில் ரூ.4.45 லட்சம் கோடி மதிப்பிலான 46.08 கோடி பரிவர்த்தனைகள் நடந்துள்ளதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்: வீட்டில் மனைவியுடன் பூஜை; மருத்துவர் வராததால் சிறுவன் உயிரிழப்பு: ம.பி.யில் அவலம்


ஃபாஸ்ட் டாக் வசூல்


டோல் பிளாசாக்களில் தானியங்கியாக மாற்றப்பட்டுள்ள தேசிய மின்னணு டோல் கலெக்ஷன் FASTAG ஆனது ஆகஸ்ட் மாதத்தில் ரூ.4,245 கோடி மதிப்பிலான பரிவர்த்தனைகளைப் பதிவு செய்துள்ளது, இது ஜூலை மாதம் ரூ.4,162 கோடி பரிவர்த்தனையை விட அதிகமாகும். பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, இது ஜூலை மாதத்தில் 26.5 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.



ஜிஎஸ்டி வசூல்


ஆதார் அடிப்படையிலான பணம் செலுத்தும் AePS அடிப்படையில், ஆகஸ்ட் மாதத்தில் பரிவர்த்தனைகள் கிட்டத்தட்ட 10 சதவீதம் குறைந்து ரூ.27,186 கோடியாக இருந்தது, முந்தைய மாதத்தில் ரூ.30,199 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 11 கோடியில் இருந்து 10.56 கோடியாக குறைந்துள்ளது. இந்தியா ஆகஸ்ட் மாதத்தில் 1.43 லட்சம் கோடி மதிப்புள்ள சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) வசூலித்துள்ளது, இது கடந்த ஆண்டு இதே மாதத்தில் வசூலிக்கப்பட்ட வரியை விட 28 சதவீதம் அதிகமாகும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து ஆறாவது மாதமாக ஜிஎஸ்டி வசூல் 1.40 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. “கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் ஆகஸ்ட் 2022 வரையிலான ஜிஎஸ்டி வருவாயின் வளர்ச்சி 33% ஆக உள்ளது, இது தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சிறந்த பொருளாதாரத்தை உறுதி செய்வதற்காக கடந்த காலத்தில் கவுன்சில் எடுத்த பல்வேறு நடவடிக்கைகளின் தெளிவான தாக்கம்தான் இது” ,என்று நிதி அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.