மேலும் அறிய

India US Trade Deal: ரூ.45 லட்சம் கோடி..! அமெரிக்காவிடமிருந்து இந்திய வாங்கும் பொருட்களின் மொத்த லிஸ்ட் - எது அதிகம்?

India US Trade Deal: அமெரிக்கா உடனான சுமார் ரூ.45 லட்சம் கோடி வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம், இந்தியா இறக்குமதி செய்ய உள்ள பொருட்கள் என்ன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

India US Trade Deal: தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம், அமெரிக்காவிடமிருந்து இந்தியா இறக்குமதி செய்ய உள்ள பொருட்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

ரூ.45 லட்சம் கோடி மதிப்பிலான இறக்குமதி

அமெரிக்கா உடனான தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில், ரூ.45 லட்சம் கோடி மதிப்பிலான பொருட்கள் இந்திய சந்தைக்கு இறக்குமதி செய்யப்பட உள்ளன. இது இந்திய நிறுவனங்களின் கொள்முதல் திறனால் மட்டுமின்றி, அமெரிக்க நிறுவனங்களின் விநியோக சக்தியையும் பொருட்டே இறுதி நிலையை எட்ட உள்ளது. இந்நிலையில், அமெரிக்காவிடமிருந்து இந்தியாவின் இறக்குமதி சந்தை எப்படி உள்ளது? உள்நாட்டில் அதிகளவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் என்ன? என்பது குறித்த விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

இந்தியாவின் இறக்குமதி உறவு

கடந்த ஆண்டு அமெரிக்காவிடமிருந்து 45.5 பில்லியன் அமெரிக்க டாடலர்கள் அதாவது, 4.12 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டன. அதேநேரம், நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் 40 பில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் 3.62 லட்சம் கோடி மதிப்பிலான பொருட்கள் அங்கிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. அதில் சுமார் 11 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான பொருட்கள் அமெரிக்கா கச்சா மற்றும் பெட்ரோலிய பொருட்களாகும். கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் வாங்கப்பட்டதை காட்டிலும், எண்ணெய் தொடர்பான அமெரிக்க பொருட்களின் இறக்குமதி 35 சதவிகித அதிகரித்துள்ளது. நிலக்கரி மற்றும் கோக் ஆகியவை 2.7 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு நிகராக இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

ரஷ்யா உள்ளிட்ட பிற நாடுகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு வரும் எண்ணெய் தொடர்பான பொருட்கள் உடனடியாக அமெரிக்கா தரப்புக்கு மாற்றப்பட உள்ளதால், அநாட்டுடனான வர்த்தகம் மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இதேபோன்று, இந்தோனேசியாவிடமிருந்து வாங்கும், கோக்கிங் நிலக்கரியையும் இனி அமெரிக்கா இறக்குமதி மூலம் இந்தியா பூர்த்தி செய்யலாம். இது மலிவு விலையில், நல்ல தரமானதாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

பூஜ்ஜிய வரியில் ஏற்றுமதி

அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற ட்ரம்ப், சரி நிகர் வரி விகிதம் என, இந்திய பொருட்கள் மீதான வரியை 25 சதவிகிதமாக உயர்த்தினார். உக்ரைன் போர் தொடர்பான பொருளாதார தடைகளை மீறி ரஷ்யாவிடமிருந்து, கச்சா எண்ணெய் வாங்குவதற்காக 25 சதவிகிதம் அபராத வரியும் விதிக்கப்பட்டது. இந்நிலையில் முன்னெடுக்கப்பட்டுள்ள தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் மூலம், அபராத வரி நீக்கப்பட்டுள்ளதோடு, இந்திய பொருட்கள் மீதான வரியும் 18 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.  அடுத்த சில தினங்களில் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம்.  அடுத்த மாத இறுதியில் இருநாடுகளுக்கு இடையேயான இறுதி ஒப்பந்தம் கையெழுத்தானது, இந்திய பொருட்கள் மீது எந்தவிகித இறக்குமதி வரியும் விதிக்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு நிகராக அமெரிக்க பொருட்கள் மீது இந்தியா வரி விதிக்காது என உறுதி அளிக்கப்பட்டுள்ளதாம்.

இந்தியா இறக்குமதி செய்ய உள்ள பொருட்கள் என்ன?

அமெரிக்கா உடனான தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தை தொடர்ந்து, அந்நாட்டிலிருந்து இந்தியா இறக்குமதியை அதிகரிக்க உள்ளது. அமெரிக்க எரிசக்தி பொருட்கள் (எண்ணெய், எல்என்ஜி, எல்பிஜி), உயர் தொழில்நுட்ப பொருட்கள் மற்றும் விவசாய பொருட்களில் குறிப்பிடத்தக்கவற்றின் மீதான வரி 18% அல்லது அதற்கும் குறைவாகக் குறைக்கும் அதே வேளையில், அதிக அளவு ஆற்றல், விமானம் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பம் தொடர்பான இறக்குமதியில் இந்தியா அதிக கவனம் செலுத்த உள்ளது.

குறைந்த இறக்குமதி வரிகளுக்கான பொருட்கள்:

குறைந்த இறக்குமதி வரி விதிக்கப்பட வாய்ப்புள்ள பொருட்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

விவசாயம் & உணவுப் பொருட்கள்: ஜாம், ஜெல்லி, பழச்சாறுகள், தேநீர், ஈஸ்ட் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட வெளிநாட்டு பீன்ஸுக்கு வரி இல்லை.

உலர் பழங்கள்: பாதாம், வால்நட்ஸ் மற்றும் பிஸ்தாக்களுக்கு ஒதுக்கீடு அடிப்படையிலான, குறைந்த வரி இறக்குமதி சாத்தியம்

மதுபானங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள்: ஒயின், மதுபானங்கள் மற்றும் பேக்கரி பொருட்களுக்கான வரிகள் குறைக்கப்படலாம்.

இயந்திரங்கள், உதிரி பாகங்கள்: சிறப்பு இயந்திரங்கள், டேட்டா செண்டர் உபகரணங்கள் மற்றும் செமி கண்டக்டர் உதிரிபாகங்கள்

எரிசக்தி பொருட்கள்: கச்சா எண்ணெய், எல்என்ஜி மற்றும் எல்பிஜி இறக்குமதி அதிகரிக்கப்படலாம்

விமானம் & விண்வெளி: போயிங் விமானங்கள், இயந்திரங்கள் மற்றும் உதிரி பாகங்களுக்கான குறிப்பிடத்தக்க ஆர்டர்கள்.

சில பொருட்களுக்கான வரி குறைப்புக்கள் 3 முதல் 10 ஆண்டுகளுக்குள் படிப்படியாக மேற்கொள்ளப்படலாம்.

 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Gold rate today : மீண்டும் உயர தொடங்கிய தங்கம் விலை.! இன்று ஒரு சவரனுக்கு எவ்வளவு தெரியுமா.?
மீண்டும் உயர தொடங்கிய தங்கம் விலை.! இன்று ஒரு சவரனுக்கு எவ்வளவு தெரியுமா.?
LPG Cylinder Price: வீட்டிற்கே வந்த போர்..! நள்ளிரவில் அதிரடியாக உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை - தாய்மார்கள் ஷாக்
LPG Cylinder Price: வீட்டிற்கே வந்த போர்..! நள்ளிரவில் அதிரடியாக உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை - தாய்மார்கள் ஷாக்
GOLD AND SILVER RATE TODAY : 15 ஆயிரத்திற்கு கீழ் வந்த தங்கம் விலை.! குஷியில் துள்ளி குதிக்கும் நகைப்பிரியர்கள்
15 ஆயிரத்திற்கு கீழ் வந்த தங்கம் விலை.! குஷியில் துள்ளி குதிக்கும் நகைப்பிரியர்கள்
Kerala Lottery Result: காருண்யா லாட்டரியில் பரிசு மழை கொட்டுமா? இந்தாங்க குலுக்கல் முடிவுகள்!
Kerala Lottery Result: காருண்யா லாட்டரியில் பரிசு மழை கொட்டுமா? இந்தாங்க குலுக்கல் முடிவுகள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Udhayanidhi Stalin | ’’ஐயா உதவி பண்ணுங்க’’காலில் விழுந்த மூதாட்டி பதறிய உதயநிதி | Tenkasi
Bangalore Dog Issue | சிறுநீர் கழித்த வளர்ப்பு நாய்வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் சரமாரி தாக்குதல்!
Ameer slams Vijay | ’’மனைவி மகளை விரட்டிட்டுமகளிர் தின விழா கேக்குதா?’’விஜய்யை கிழித்த அமீர் | TVK
Kiruthiga Udhayanidhi | ”பிரச்சனைல மாட்டிக்காதீங்க”விஜய்க்கு மறைமுக ADVICE?கிருத்திகா உதயநிதி அதிரடி
Vijay Sangeetha Divorce | PRESS MEET-க்கு ரெடி!அதிரடி காட்டும் சங்கீதா இறங்கி வந்த விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: ‘எனக்கு வருத்தம் எல்லாம் கிடையாது” - மனைவி சங்கீதா தொடுத்த வழக்கு... முதல்முறையாக வாய் திறந்த விஜய்
‘எனக்கு வருத்தம் எல்லாம் கிடையாது” - மனைவி சங்கீதா தொடுத்த வழக்கு... முதல்முறையாக வாய் திறந்த விஜய்
TVK Vijay: அண்ணன் சீர் திட்டத்தை அறிவித்த விஜய்.. ஆனந்த கண்ணீர் வடித்த பெண்கள் - வீடியோவை பாருங்க!
TVK Vijay: அண்ணன் சீர் திட்டத்தை அறிவித்த விஜய்.. ஆனந்த கண்ணீர் வடித்த பெண்கள் - வீடியோவை பாருங்க!
விஜய் அதிரடி அறிவிப்பு! குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2500, இலவச சிலிண்டர்கள் & மேலும் பல!
விஜய் அதிரடி அறிவிப்பு! குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2500, இலவச சிலிண்டர்கள் & மேலும் பல!
TVK Vijay: விஜய்க்கு போட்டியாக களமிறங்கப்போகும் விசிக? தளபதிக்கு எதிராக இறங்கப்போவது இவரா?
TVK Vijay: விஜய்க்கு போட்டியாக களமிறங்கப்போகும் விசிக? தளபதிக்கு எதிராக இறங்கப்போவது இவரா?
Election 2026: பதற்றமான ஏரியாக்கள் எது? லிஸ்ட் எடுக்கும் போலீஸ்! விழுப்புரம் மாவட்ட ஆட்சியரின் அதிரடி 'பிளான்'!
Election 2026: பதற்றமான ஏரியாக்கள் எது? லிஸ்ட் எடுக்கும் போலீஸ்! விழுப்புரம் மாவட்ட ஆட்சியரின் அதிரடி 'பிளான்'!
₹50,000 முன்பணத்தில் Maruti Ertiga வாங்க EMI எவ்வளவு? குடும்பத்திற்கு ஏற்ற கார் பற்றிய முழு தகவல் இதோ
₹50,000 முன்பணத்தில் Maruti Ertiga வாங்க EMI எவ்வளவு? குடும்பத்திற்கு ஏற்ற கார் பற்றிய முழு தகவல் இதோ
Toyota Discounts: ரூபாய் 45 ஆயிரம் வரை தள்ளுபடி.. டொயொட்டா தந்த ஆஃபர் - எந்த காருக்கு எவ்வளவு?
Toyota Discounts: ரூபாய் 45 ஆயிரம் வரை தள்ளுபடி.. டொயொட்டா தந்த ஆஃபர் - எந்த காருக்கு எவ்வளவு?
DMK alliance seat allocation : திமுக கூட்டணியில் இத்தனை கட்சிகளா.!! எந்த எந்த கட்சிக்கு எத்தனை தொகுதி.? இதோ சீக்ரெட் லிஸ்ட்
திமுக கூட்டணியில் இத்தனை கட்சிகளா.!! எந்த எந்த கட்சிக்கு எத்தனை தொகுதி.? இதோ சீக்ரெட் லிஸ்ட்
Embed widget