இந்த நிறுவனத்தின் 75-வது ஆண்டு விழா இந்த ஆண்டில் கொண்டாடுகிறது. இந்த நிறுவனத்தின் மூலமாக அனைத்து விளையாட்டுகளுக்குமான ஸ்பான்சர்  செய்யப்பட்டது.


ஆரம்பகாலம்


டி.எஸ்.நாராயணசாமி மற்றும் சங்கர லிங்க ஐயர் ஆகிய இருவரால் தொடங்கப்பட்டது இந்தியா சிமெண்ட்ஸ். 1946-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் உற்பத்தி 1949-ஆம் ஆண்டு தொடங்கியது.  ஆனால் 1946-ஆம் ஆண்டே பொதுப்பங்கு (ஐபிஒ) வெளியிட்டனர். துரதிருஷ்டவசமாக டி.எஸ்.நாராயணசாமி (57) இறந்துவிடவே 23 வயதான ஸ்ரீனிவாசன் 1968-ஆம் ஆண்டு இணை நிர்வாக இயக்குநராக பொறுப்பு ஏற்கிறார். சங்கரலிங்க ஐயரின் மகன் கே.எஸ்.நாராயண் நிர்வாக இயக்குநராக இருந்தார். இதனிடையே நிர்வாகத்துக்குள் சச்சரவு எழவே 1979-ஆம் ஆண்டு நடந்த ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் நிர்வாக இயக்குநர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறார். இதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார். அதன் பிறகு ஆண்டு பொதுக்குழுவில் சச்சரவு நீடிக்கிறது. அப்போது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வசம் கணிசமான பங்குகள் இருப்பதால் நிறுவனத்தை நடத்துவதற்கு பிரத்யேக குழுவை அமைத்து நிறுவனம் செயல்பட்டது.




இந்த சமயத்தில் நிறுவன முதலீட்டளர்கள் (எல்.ஐ.சி, யுடிஐ) வசமுள்ள பங்குகளை ஐ.டி.சி. வாங்குகிறது. இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார். அதனால் இந்த பங்குகளை ஐடிசி மீண்டும் திரும்பி வழங்கியது. ஒரு வேளை இந்த நடவடிக்கை இல்லையென்றால் ஐடிசியின் ஒரு அங்கமாக இந்தியா சிமெண்ட்ஸ் மாறி இருக்கும். இந்த நிலையில் குடும்பத்தில் உள்ள சிக்கல்கள் தீர்க்கப்பட்டு 1989-ஆம் ஆண்டு மீண்டும் நிர்வாக இயக்குநராக ஸ்ரீனிவாசன் பொறுபேற்றார். இதனை தொடர்ந்து குடும்பத்தில் உள்ள பிற உறுப்பினர்களின் பங்குகளை வாங்குவதற்கான முயற்சியில் வெற்றிபெறுகிறார். ஒரு கட்டத்தில் 28 சதவீத பங்குகளை பெற்றிருக்கும் பெரிய பங்குதாரராக மாறிவிடுகிறார். ஆனால் நிறுவனத்தின் நிதி நிலைமை சரியில்லை. தலைமை இல்லை, இலக்கு இல்லை, தெளிவான பாதை இல்லை என்பதால் கடும் சிக்கலில் இருந்தது நிறுவனம்.


சிமெண்ட் துறை


ஒவ்வொரு துறையை போலவே சிமெண்ட் துறையிலும் பல கட்டுப்பாடுகள் இருந்தது. உற்பத்தி மற்றும் விலை கட்டுப்பாடுகள் இருந்தன. இவை படிப்படியாக விலக்கிக்கொள்ளப்பட்டன. 70-களில் இந்தியாவில் 2 கோடி டன் மட்டுமே உற்பத்தி செய்ய முடியும். 80களில் 4 கோடி டன் அளவுக்கு உற்பத்திக்கு அனுமதி வழங்கப்பட்டது. 80-களின் இறுதியில்தான் கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டன. சீனாவுக்கு அடுத்து சிமெண்ட் உற்பத்தியில் இந்தியா இருக்கிறது. மூன்றாவது இடத்தில்தான் அமெரிக்கா உள்ளது.


சிமெண்ட் உற்பத்திக்கு தேவையான மூலப்பொருள் லைம்ஸ்டோன். இவை பெரும்பாகும் தென் இந்தியாவில் உள்ளது. இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்துக்கு அடுத்த 100 ஆண்டுகளுக்கு தேவையான லைம்ஸ்டோன் (200 கோடி டன் கையிருப்பு) இருக்கிறது. ஆனால் ஒட்டுமொத்த சிமெண்ட் துறைக்கு இதுபோதுமானதாக இருக்காது. அடுத்த 15 ஆண்டுகளுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது. தற்போது இந்தியாவின் உற்பத்தி 40 கோடி டன் என்றாலும் வரும் காலத்தில் இந்தியாவை தேவைக்கு லைம்ஸ்டோன் போதுமானதாக இருக்காது என என்.ஸ்ரீனிவாசன் தெரிவித்திருக்கிறார்.


ரூ.551 கோடி செலுத்தப்பட்டது.


சிறப்பாக இருந்த இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் மீண்டும் சிக்கலில் தடுமாறியது. அதனால் கடன் மீண்டும் உயரத்தொடங்கியது. இந்த நிலையில் கோவிட் சமயத்தில் கேஷ் அண்ட் கேரி மாடலில் செயல்படத் தொடங்கியது. இதனால் கடந்த நிதி ஆண்டில் 551 கோடி ரூபாய் அளவுக்கு கடனை அடைத்தது. நடப்பு நிதி ஆண்டிலும் கடனை அடைப்பதற்கான முயற்சியில் ஈடுபடும் என சில நாட்களுக்கு முன்பு நடந்த 75 வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் ஸ்ரீனிவாசன் தெரிவித்தார். மேலும் கடந்த ஆண்டு 35 சதவீத உற்பத்தி திறனில் செயல்பட்டோம். தற்போது உற்பத்தி திறன் 50 சதவீதமாக உயர்ந்திருக்கிறது என்றும் தெரிவித்திருக்கிறார்.




நடப்பு நிதி ஆண்டிலும் சிறிதளவுக்கு கடனை அடைத்த பிறகு விரிவாக்க பணிகளில் கவனம் செலுத்த இருக்கிறோம். பல ஆண்டுகளுக்கு முன்பு உற்பத்தி துறைக்காக ஐசிஐசிஐ அல்லது ஐடிபிஐ உள்ளிட்ட வங்கிகள் நீண்ட கால கடனை கொடுத்துவந்தன. ஆனால் தற்போது நீண்ட கால கடன்களே இல்லை என்னும் சூழல் இருக்கிறது. பங்குகளை விற்று நிதியை திரட்ட வேண்டும் அல்லது வர்த்தக வங்கிகளிடம் குறுகிய கால கடனுக்கு செல்ல வேண்டும் இவை இரண்டும் தொழில்துறைக்கு பெரும் சிக்கல் என தெரிவித்திருக்கிறார்.


தென் இந்திய மாநிலங்கள், குஜராத், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஒடிசா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட சில மாநிலங்களில் விற்பனை செய்து வருகிது இந்தியா சிமெண்ட்ஸ். மத்திய பிரதேசத்தில் ஆலை அமைக்கும் முயற்சி வெற்றிபெரும் பட்சத்தில் இந்தியா முழுமைக்குமான பிராண்டாக இந்தியா சிமெண்ட்ஸ் இருக்ககூடும்.


சர்ச்சைகள்


சிமெண்ட் துறையில் இருந்து எப்படி பிரிக்க முடியாதோ அதேபோல சர்சைகளில் இருந்தும் ஸ்ரீனிவாசனை பிரிக்க முடியாது. 1960-களிலே இந்தியா சிமெண்ட்ஸ்காக விளையாடுபவர்களில் பலர் ரஞ்சி டிராபிகளில் விளையாடுவர்கள். அதனால் இயல்பான அடுத்தகட்டம் என்பது ஐபிஎல்தான். ஒரு வேளை ஐபிஎல் ஏலத்தில் இந்தியா சிமெண்ட்ஸ் பங்கேற்கவில்லை என்றால் சென்னை பிரான்சைஸ் யாருக்கும் கிடைத்திருக்காது என குறிப்பிட்டிருக்கிறார்.




இவரை பற்றிய சர்ச்சைகளுக்கும் குறைவில்லை. பிசிசிஐ-இல் இருந்துகொண்டே ஐபிஎல் டீம் உரிமையாளராக இருப்பது, மேட்ச் ஃபிக்சிங் காரணமாக சிஎஸ்கேவுக்கு இரு ஆண்டுகள் தடை, சிமெண்ட் உற்பத்தியாளர்கள் ஒன்றாக இணைந்து விலையை தீர்மானத்தது, ஆதாயத்துகாக ஜெகன் மோகன் ரெட்டி நிறுவனத்தில் முதலீடு செய்தது என சர்ச்சைகளுக்கும் குறைவில்லை.


1968-ஆம் ஆண்டு முதல் நிறுவனத்தில் பல பொறுப்புகளில் இருந்துவரும் இவர் மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறார். இவர் மகள் ரூபாவும் இயக்குநர் குழுவில் இணைந்திருப்பது, கடனை குறைத்திருப்பது, போதுமான மூலப்பொருகள் கைவசம் இருப்பது உள்ளிட்ட காரணங்களால் நிறுவனத்துக்கு பலமான அடித்தளத்தை அமைத்திருக்கிறார் என்.ஸ்ரீனிவாசன்.