கைக்குள் உலகம்- ஒரு நொடியில் பண பரிமாற்றம்


நாளுக்கு நாள் மாறி வரும் நவீன காலத்திற்கு ஏற்ப வீட்டிற்குள் இருந்தே உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் அந்த பொருட்களையும் வாங்க முடியும். அப்படி கைக்குள் உலகம் வந்து விட்ட நிலையில், ஒரு சில நொடிகளில் பணத்தை வரவு வைக்கவும், பணத்தை அனுப்பவும் முடிகிறது. அந்த அளவிற்கு வங்கிகளில் பண பரிமாற்றம் எளிமையாக மாறிவிட்டது. மேலும் ஒவ்வொரு மாதமும் ஊழியர்களுக்கு சம்பளம், வாங்கிய கடனுக்கு இஎம்ஐ கட்டுவது என வங்களின் சேவையும் மக்களோடு ஒன்றிணைந்துவிட்டது. இந்த நிலையில் வங்கியில் உள்ள உங்கள் பணத்தில் ஒரு ரூபாய் கூட எடுக்க முடியாத நிலை உருவானால் என்ன ஆகும். அப்படி ஒரு நிலை தான் டிசம்பர் 1ஆம் தேதி முதல் உருவாகப்போகிறது.

Continues below advertisement


வங்கி கணக்கு முடங்கும் அபாயம்


வங்கி கணக்கில் இருந்து பணபரிமாற்றம் செய்யமுடியாமல் முடக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வங்கியில் e-KYC அப்டேட் செய்யாத வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கு முடக்கப்படும் என பஞ்சாப் நேஷனல் பேங்க் (PNB) தங்களது வாடிக்கையாளர்களுக்கு அலர்ட் விடுத்துள்ளது. கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்ட பஞ்சாப் வங்கி வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், வரும் நவம்பர் 30, 2025-க்குள் e-KYC புதுப்பிக்கப்படாத நிலையில், அவர்களின் சேமிப்பு கணக்குகள் தற்காலிகமாக முடக்கப்படும் என்று வங்கி அறிவித்துள்ளது. இதன் காரணமாக வங்கியில் இருந்து பணம் எடுப்பது, பணம் செலுத்துவது முற்றிலும் முடங்கும் நிலை ஏற்படும் என கூறப்பட்டுள்ளது. 


வாடிக்கையாளர்களுக்கு பஞ்சாப் வங்கி எச்சரிக்கை


எனவே இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பஞ்சாப் நேஷனல் பேங்க் வாடிக்கையாளர்கள் தங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள வங்கிக்கு சென்று வாடிக்கையாளர்களின் அடையாளமாக உள்ள ஆதார் அட்டை, பான் அட்டை, வீட்டின் முகவரி சான்று, வாடிக்கையாளரின் புகைப்படம், வங்கி கணக்கில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் ஆகியவை எடுத்துச் செல்ல வேண்டும். அப்போது e-KYC jதிவேற்றம் செய்யப்படும். அல்லது வீட்டில் இருந்தே e-KYC செய்வதற்கான வாய்ப்பையும் வங்கி நிர்வாகம் அளித்துள்ளது. அதன் படி,  PNB ONE மொபைல் ஆப் வழியாகவோ, இணைய வங்கி சேவை மூலமாகவோ KYC வீட்டில் இருந்து செய்யலாம். இது மட்டுமில்லாமல் வங்கியில் KYCக்காக நம்முடைய ஆவணங்களை அளித்தோமா.? இல்லையா.? என பலருக்கு குழப்பம் இருக்கும். எனவே e-KYC செய்து விட்டோமா என்பதையும் ஈசியாக தெரிந்து கொள்ளலாம். 


 



KYC பதிவேற்றம் செய்வது எப்படி.?


பஞ்சாப் நேஷனல் வங்கியின் இணைய வங்கி தளத்தில் உள்நுழைந்து ‘Personal Settings’ அல்லது ‘Profile’ பகுதியில்  KYC என்ற குறியீட்டை கிளிக் செய்வதன் மூலம் ஏற்கனவே e-KYC செய்யப்பட்டு விட்டதா என தெரியவரும். அதில் KYC பதிவேற்றம் செய்யவில்லையென்றால் அது தொடர்பான அலர்ட் விடுக்கும்.KYC பதிவேற்றம் முடிந்திருந்தால் ‘KYC Updated’ என அந்த இணைய தள பக்கத்தில் குறிப்பிடப்படும்.


KYC எதற்காக.?


பணமதிப்பு, மோசடி, நிதி குற்றங்களை தடுப்பதற்காக KYC அவசியமானதாக உள்ளது. தற்போது உள்ள காலத்தில் சமூகவலைதளங்கள் மூலம் பண மோசடி அதிகரித்துள்ளது. எனவே இதனை தடுக்கவும் KYC முக்கியமானதாக உள்ளது.