ஸ்டார்பக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி கெவின் ஜான்சன் ஏப்ரல் 4 ஆம் தேதி பதவி விலகுவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
பதவி விலகும் ஜான்சன் 13 ஆண்டுகளாக நிறுவனத்தின் குழுவில் உள்ளார் மேலும் ஏப்ரல் 2017 தொடங்கி அவர் நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். இதையடுத்து ஜான்சனுக்கு முன்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஹோவார்ட் ஹூல்ட்ஸ் அதன் இடைக்கால நிர்வாகியாக இருப்பார் என்றும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து கருத்துக் கூறியுள்ள ஜான்சன், ‘நிறுவனத்துடனான எனது 13 ஆண்டுகால தொடர்புக்கு இதுதான் சரியான முடிவுரையாக இருக்கும் என கருதுகிறேன்’ எனக் கூறியுள்ளார்.
நிர்வாக அதிகாரியாக பதவியேற்க இருக்கும் ஷூல்ட்ஸ் வெறும் 1 டாலர் மட்டுமே சம்பளம் பெறுவார் எனக் கூறப்படுகிறது. இவர் அடுத்த நிர்வாக அதிகாரியைத் தேர்ந்தெடுப்பார். நியூயார்க் மற்றும் அரிசோனாவில் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் சங்கம் தொடங்கியதற்கு இடையே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதற்கிடையே கெவின் ஜான்சன் இதுநாள் வரை தன் உடன் இருந்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.