இதுதொடர்பான அறிக்கையின் படி, கடந்த டிசம்பர் மாதத்தில் மொத்தமாக ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 507 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வரியாக வசூலாகியுள்ளது. தொடர்ந்து, 10-ஆவது முறையாக நாட்டின் மாத ஜிஎஸ்டி வரி வருவாய் ரூ.1.4 லட்சத்தை கடந்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்தாண்டுக்கான டிசம்பர் மாதத்தில் ஜி.எஸ்.டி வரி வருவாய் 15 சதவீதம் அளவிற்கு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் ரூ.1.29 லட்சம் கோடி ஜி.எஸ்.டி வரியாக வசூலாகி இருந்தது.
வருவாய் அதிகரிப்பு:
இதில், மத்திய ஜி.எஸ்.டி. வருவாயானது ரூ.26, ஆயிரத்து 711 கோடி ரூபாயாக உள்ளதாகவும், மாநில ஜி.எஸ்.டி வருவாயானது ரூ.33 ஆயிரத்து 357 கோடியாக உள்ளதாகவும், ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி வருவாயானது 78 ஆயிரத்து 434 கோடி ரூபாயாக உள்ளதாகவும் மத்திய நிதி துறை அமைச்சகம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் மீதான வரி ரூ. 40 ஆயிரத்து 263 கோடியும், இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் மீது விதிக்கப்பட்டது உள்ளிட்ட செஸ் வரி ரூ.11 ஆயிரத்து 5 கோடியும் அடங்கும். ஒருங்கிணைந்த வரி வருவாயிலிருந்து, ரூ.36,669 கோடி மத்திய அரசுக்காகவும், ரூ.31,094 கோடி மாநில அரசுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 7.6 கோடி இ-வே பில்கள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், நவம்பர் மாதத்தில் 7.9 கோடி இ-வே பில்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு:
அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாதத்தில், 23 ஆயிரத்து 598 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. கர்நாடகா ரூ.10,061 கோடி, குஜராத்தில் ரூ.9,238 கோடி மற்றும் தமிழ்நாட்டில் ரூ. 8,324 கோடியும் ஜி.எஸ்.டி வரியாக வசூலாகியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் தமிழகத்தில் ரூ.6,635 கோடி வரியாக வசூலானது குறிப்பிடத்தக்கது. இந்த மாதத்தில், சரக்குகள் மீதான இறக்குமதி வரி வருவாய் 8% அதிகரித்துள்ளது. அதோடு, உள்நாட்டு பரிவர்த்தனையின் வருவாய் கடந்த ஆண்டு இதே மாதத்தை காட்டிலும் 18% அதிகம் எனவும் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாகவே, மொத்த வரி வருவாய் அதிகரித்துள்ளது.