கிராம் சுரக்ஷா யோஜனா:

கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் தங்களது சேமிப்பை தொடங்க சிறந்த இடம் இந்திய அஞ்சல் அலுவலகம். அரசாங்கம் குடிமக்களுக்கு அஞ்சலகம் மூலம் ஏகப்பட்ட சலுகைகளை வழங்கி வருகிறது. முழுமையாக வளர்ச்சியடையாத கிராமப்புறங்களில் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பல சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் மூலம் அவர்களுக்கு நல்ல வருமானம் கிடைப்பதன் மூலம் அவர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்படுகிறது.


கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களில் மிகவும் பிரபலமாக விளங்குவது கிராம் சுரக்ஷா யோஜனா திட்டம். இது ஒரு முழு ஆயுள்  காப்பீட்டுத் திட்டமாகும். இது ஒரு ஐந்து வருட கவரேஜ் திட்டம், அதற்கு பிறகு எண்டோமென்ட் அஷ்யூரன்ஸ் பாலிசியாக மாற்றிக்கொள்ளும் வாய்ப்பும் உள்ளது. அதனால் பாலிசிதாரர் தன்னுடைய 55, 58, அல்லது 60 வயது வரை கூட இந்த பாலிசியில் குறைந்த பிரீமியங்களைச் செலுத்தி பயன்பெறலாம்.

திட்டத்தின் அம்சங்கள் மற்றும் தகுதிகள்:

கிராம் சுரக்ஷா யோஜ்னா திட்டத்தில் சேர வயது வரம்பு 19 முதல் 55 வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாலிசிதாரரின் குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை ரூ 10,000; அதிகபட்ச காப்பீட்டுத் தொகை ரூ 10 லட்சம். நான்கு ஆண்டுகள் பிரீமியம் செலுத்திய பிறகு கடன் வசதி உண்டு. 5 ஆண்டுகளுக்கு முன்னரே திட்டத்தை பிரீமியம் செலுத்தாமல் கைவிட்டால் போனஸ் தொகை கிடைக்காது. பிறகு 59 வயது வரை எண்டோமென்ட் அஷ்யூரன்ஸ் பாலிசியாக மாற்றிக்கொள்ளலாம். ஆனால் அதன் முதிர்வு காலம் ஒரு வருடத்திற்குள் இருக்குமாயின் அல்லது பிரீமியம் நிறுத்தம் ஏற்பட்டால் இந்த வாய்ப்புக்கு தகுதில்லை. பாலிசி முன்னரே சரண்டர் செய்யப்படுமாயின் குறைந்த காப்பீடு தொகை மற்றும் அதற்கு ஏற்ற சதவீக்கதில் மட்டுமே போனஸ் வழங்கப்படும். சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி ஒவ்வொரு  Rs 1000 க்கும் ரூ 60 போனஸ் வழங்கப்படும்.

முதிர்வு தொகை :

பாலிசிதாரர் ஒவ்வொரு மாதமும் கிராம சுரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ் தினசரி சுமார் 50 ரூபாய் வீதம் மாதம் ரூ.1,515 செலுத்துவதன் மூலம் Rs. 35 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டலாம். இந்த பாலிசி மூலம் 55 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் முதிர்ச்சியடைந்த பிறகு ரூ.31,60,000 திரும்ப பெறலாம். 58 ஆண்டு காலம் முதலீடு செய்தால் ரூ.33,40,000 திரும்ப பெறலாம். 60 ஆண்டு காலம் முதலீடு செய்தால் ரூ.34.60 லட்சம் திரும்ப பெறலாம்.

திட்டத்தின் குறிக்கோள் :

இந்தியாவில் கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டம் 1995ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கிராமப்புறங்களில் உள்ள ஏழைகளுக்கும் பெண் தொழிலாளர்களுக்கும் உதவும் எண்ணத்திலும் அவர்களிடம் காப்பீடு அறிவை வளர்ப்பதும் தான் இந்த திட்டத்தின் முக்கியமான குறிக்கோள்.