GOLD SILVER RATE: காலையிலேயே அதிர்ச்சி.! ரூ.10,000 உயர்ந்துடுச்சே.! தங்கம், வெள்ளியின் இன்றைய விலை என்ன தெரியுமா.?
Gold Silver Rates Today: தங்கத்தின் விலை நேற்று அதிரடியாக உயர்ந்த நிலையில், இன்னும் கணிசமான அளவு உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலையை பார்க்கலாம்.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று அதிரடியாக உயர்ந்த நிலையில், இன்றும் கணிசமான அளவில் உயர்ந்துள்ளது. அதன்படி, தங்கம் சவரனுக்கு 800 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. அதேபோல், வெள்ளியின் விலையும் இன்று அதிரடியாக கிராமிற்கு 10 ரூபாய் உயர்ந்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரத்தை இப்போது பார்க்கலாம்.
இன்றும் உயர்ந்த தங்கத்தின் விலை
தங்கத்தின் விலை நேற்று அதிரடியாக உயர்ந்த நிலையில், இன்றும் சவரனுக்கு 800 ரூபாய் உயர்ந்து அதிர்ச்சி அளித்துள்ளது. கடந்த வார இறுதியில் இருந்து தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது.
- 10-ம் தேதி ஒரு கிராம் 14,125 ரூபாயாகவும், ஒரு சவரன் 1,13,000 ரூபாயாகவும் இருந்தது.
- 11-ம் தேதி ஒரு கிராம் 14,100 ரூபாயாகவும், ஒரு சவரன் 1,12,800 ரூபாயாகவும் இருந்தது.
- 12-ம் தேதி ஒரு கிராம் 14,100 ரூபாயாகவும், ஒரு சவரன் 1,12,800 ரூபாயாகவும் இருந்தது.
- 13-ம் தேதி ஒரு கிராம் 14,060 ரூபாயாகவும், ஒரு சவரன் 1,12,480 ரூபாயாகவும் இருந்தது.
- 14-ம் தேதி ஒரு கிராம் 14,220 ரூபாயாகவும், ஒரு சவரன் 1,13,760 ரூபாயாகவும் இருந்தது.
இன்று தங்கத்தின் விலை என்ன.?
இந்த நிலையில், இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் உயர்ந்துள்ளது.. அதன்படி, கிராமிற்கு 100 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 14,320 ரூபாயாகவும், ஒரு சவரன் 1,14,560 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
வெள்ளியின் விலை கடந்த வாரத்தில் பெரிய அளவில் மாற்றமில்லாமல், சின்ன சின்ன மாற்றங்களுடன் இருந்து வந்தது. இந்த நிலையில், இந்த வாரத்தில் விலை உயர்ந்து வருகிறது.
- 10-ம் தேதி ஒரு கிராம் வெள்ளியின் விலை 265 ரூபாய்.
- 11-ம் தேதி ஒரு கிராம் வெள்ளியின் விலை 265 ரூபாய்.
- 12-ம் தேதி ஒரு கிராம் வெள்ளியின் விலை 265 ரூபாய்.
- 13-ம் தேதி ஒரு கிராம் வெள்ளியின் விலை 260 ரூபாய்.
- 14-ம் தேதி ஒரு கிராம் வெள்ளியின் விலை 265 ரூபாய்.
இந்த நிலையில், இன்று வெள்ளியின் விலை கிராமிற்கு 10 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 275 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்






















