சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 1,280 ரூபாய் உயர்ந்து அதிர்ச்சி கொடுத்துள்ளது. தமிழ் புத்தாண்டு தினமான இன்று விலை இப்படி உயர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல், வெள்ளியின் விலையும் கிராமிற்கு 5 ரூபாய் உயர்ந்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் தற்போதைய விலை என்ன என்பதை பார்க்கலாம்.

நேற்று குறைந்த நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை

வாரத்தின் முதல் நாளான நேற்று தங்கத்தின் விலை குறைந்த நிலையில், தமிழ் புத்தாண்டான இன்று அதிரடியாக விலை உயர்ந்துள்ளது.

  • 6-ம் தேதி ஒரு கிராம் 13,990 ரூபாயாகவும், ஒரு சவரன் 1,11,920 ரூபாயாகவும் இருந்தது.
  • 7-ம் தேதி ஒரு கிராம் 13,860 ரூபாயாகவும், ஒரு சவரன் 1,10,880 ரூபாயாகவும் இருந்தது.
  • 8-ம் தேதி ஒரு கிராம் 14,200 ரூபாயாகவும், ஒரு சவரன் 1,13,600 ரூபாயாகவும் இருந்தது.
  • 9-ம் தேதி ஒரு கிராம் 14,000 ரூபாயாகவும், ஒரு சவரன் 1,12,000 ரூபாயாகவும் இருந்தது.
  • 10-ம் தேதி ஒரு கிராம் 14,125 ரூபாயாகவும், ஒரு சவரன் 1,13,000 ரூபாயாகவும் இருந்தது.
  • 11-ம் தேதி ஒரு கிராம் 14,100 ரூபாயாகவும், ஒரு சவரன் 1,12,800 ரூபாயாகவும் இருந்தது.
  • 12-ம் தேதி ஒரு கிராம் 14,100 ரூபாயாகவும், ஒரு சவரன் 1,12,800 ரூபாயாகவும் இருந்தது.
  • 13-ம் தேதி ஒரு கிராம் 14,060 ரூபாயாகவும், ஒரு சவரன் 1,12,480 ரூபாயாகவும் இருந்தது.

இன்று தங்கத்தின் விலை என்ன.?

இந்த நிலையில், இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 1,280 ரூபாய் உயர்ந்துள்ளது.. அதன்படி, கிராமிற்கு 160 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 14,220 ரூபாயாகவும், ஒரு சவரன் 1,13,760 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

வெள்ளியின் விலை கடந்த வாரத்தில் பெரிய அளவில் மாற்றமில்லாமல், சின்ன சின்ன மாற்றங்களுடன் இருந்து வந்தது. அதன்படி,

  • 6-ம் தேதி ஒரு கிராம் வெள்ளியின் விலை 260 ரூபாய்.
  • 7-ம் தேதி ஒரு கிராம் வெள்ளியின் விலை 255 ரூபாய்.
  • 8-ம் தேதி ஒரு கிராம் வெள்ளியின் விலை 265 ரூபாய்.
  • 9-ம் தேதி ஒரு கிராம் வெள்ளியின் விலை 260 ரூபாய்.
  • 10-ம் தேதி ஒரு கிராம் வெள்ளியின் விலை 265 ரூபாய்.
  • 11-ம் தேதி ஒரு கிராம் வெள்ளியின் விலை 265 ரூபாய்.
  • 12-ம் தேதி ஒரு கிராம் வெள்ளியின் விலை 265 ரூபாய்.
  • 13-ம் தேதி ஒரு கிராம் வெள்ளியின் விலை 260 ரூபாய்.

இந்த நிலையில், இன்று வெள்ளியின் விலை கிராமிற்கு 5 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 265 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ் புத்தாண்டு தினமான இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்ந்ததால், நகை வாங்குவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.