தங்கத்தின் விலை கூடுவதும் குறைவதுமாய் இருந்துவரும் நிலையில், நேற்றிலிருந்து ஏறுமுகத்திற்கு மாறியுள்ளது. அதன்படி, இன்றும் சவரனுக்கு 800 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. ஆறுதல் அளிக்கும் விதமாக, வெள்ளியின் விலையில் மாற்றமில்லை. தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரத்தை இப்போது அறியலாம்.

Continues below advertisement

கூடுவதும், குறைவதுமாய் பொமக்களுக்கு போக்கு காட்டும் தங்கம்

தங்கத்தின் விலை இந்த வாரத்தின் முதல் நாளில், அதாவது 30-ம் தேதி காலையில், தங்கத்தின் விலை கிராமிற்கு 60 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 13,600 ரூபாய்க்கும், சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து 1,08,800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், மாலையில் சவரனுக்கு 1,360 ரூபாய் உயர்ந்தது. அதன்படி, கிராமிற்கு 170 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 13,770 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,10,160 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த சூழலில் 31-ம் தேதி காலையிலேயே தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் குறைந்தது. அதன்படி, கிராமிற்கு 100 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 13,670 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,09,360 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

Continues below advertisement

பின்னர், ஏப்ரல் 1-ம் தேதி தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்தது. அதன்படி, தங்கத்தின் விலை கிராமிற்கு 380 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 14,050 ரூபாய்க்கும், சவரனுக்கு 3,040 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 1,12,400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த சூழலில் 2-ம் தேதி காலை தங்கத்தின் விலை குறைந்தது. அதன்படி, சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 1,11,600 ரூபாய்க்கும், கிராமிற்கு 100 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 13,950 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. மேலும், மாலையில் 1,600 குறைந்தது. இதன் மூலம் ஒரே நாளில் 2,400 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 1,10,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன்படி, ஒரு கிராம் 300 ரூபாய் குறைந்து, கிராம் 13,750 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த சூழலில், 3-ம் தேதி, அதாவது நேற்று தங்கத்தின் விலை உயர்ந்தது. அதன்படி, சவனுக்கு 800 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 1,10,800 ரூபாய்க்கும், ஒரு கிராம் 100 ரூபாய் விலை உயர்நது, கிராம் 13,850 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இப்படி, விலை கூடுவதும், குறைவதுமாய் பொதுமக்களுக்கு போக்கு காட்டி வரும் தங்கத்தின் விலை, இன்று சவரனுக்கு 

இன்றைய விலை என்ன.?

அதன்படி, தங்கம் விலை சவரனுக்கு 800 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 1,11,600 ரூபாய்க்கும், கிராமிற்கு 100 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 13,950 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

வெள்ளி விலையில் மாற்றமில்லை

வெள்ளியின் விலை கடந்த 30-ம் தேதி காலையில் மாற்றமின்றி கிராம் 250 ரூபாய் என்ற விலையிலேயே நீடித்தது. ஆனால், மாலையில் கிராமிற்கு 5 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 255 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், 31-ம் தேதி காலையிலேயே கிராமிற்கு 5 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 250 ரூபாய்க்கு விற்பனையானது. இந்த சூழலில், ஏப்ரல் 1-ம் தேதி கிராமிற்கு 15 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 265 ரூபாய்க்கு விற்கப்பட்டது. 

இந்த சூழலில், 2-ம் தேதி வெள்ளியின் விலை கிராமிற்கு 10 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 255 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், 3-ம் தேதியான நேற்று, வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இன்றி, அதே 255 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்றும் வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இனறி, கிராம் அதே 255 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதன்படி, ஒரு கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.