Just In





Gold, Silver Price : சவரனுக்கு ரூ.448 அதிகரித்தது தங்கம்! மீண்டும் ரூ.35 ஆயிரத்தை கடந்து விற்பனை..!
Gold Silver Rrate Today in Chennai: சென்னையில் ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூபாய் 448 அதிகரித்து ரூபாய் 35 ஆயிரத்து 136க்கு விற்கப்படுகிறது.

Gold Silver Price Today: சென்னையில் நேற்று 22 காரட் ஆபரணத்தங்கம் கிராமிற்கு ரூபாய் 4 ஆயிரத்து 336க்கு விற்கப்பட்டது. சவரன் தங்கம் ரூபாய் 34 ஆயிரத்து 688க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில், அக்டோபர் மாதத்தின் முதல்நாளான இன்று சென்னையில் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கிராமிற்கு தங்கம் ரூபாய் 56 அதிகரித்து ரூபாய் 4 ஆயிரத்து 392க்கு விற்கப்படுகிறது. சவரன் தங்கம் 448 அதிகரித்து ரூபாய் 35 ஆயிரத்து 136க்கு விற்கப்படுகிறது.
சவரன் தங்கம் மீண்டும் 35 ஆயிரத்தை கடந்து விற்பனை செய்யப்படுவது மக்கள் மத்தியில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல, 24 காரட் தங்கம் கிராமிற்கு ரூபாய் 4 ஆயிரத்து 756க்கு விற்கப்படுகிறது. சவரன் தங்கம் ரூபாய் 38 ஆயிரத்து 48க்கு விற்கப்படுகிறது. வெள்ளி விலை கிராமிற்கு 70 காசுகள் உயர்ந்து ரூபாய் 63.70க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 63 ஆயிரத்து 700க்கு விற்கப்படுகிறது.

முன்னதாக, தங்கம் விலை தொடர்ந்து அதிகரிக்குமா என்பது குறித்து மெட்ராஸ் ஜூவல்லர்ஸ் மற்றும் டைமண்ட் மெர்ச்சன்ட் அசோசியேசன் தலைவர் ஜெயந்திலால் சலானி ஏபிபி நாடுக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் அவர் கூறும்போது, பொருளாதார மந்தமான சூழ்நிலை ஏற்படும்போது, பொருளாதார துறையைச் சேர்ந்த பங்குச் சந்தைகள் சரிவை நோக்கிப்போகும். அப்படிப்பட்ட சூழலில் தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரிக்கும். இந்த மாதிரியான சூழ்நிலை தொடர்ந்து நீடித்தால் தங்கம் விலை இன்னும் அதிகரிக்கும். காரணம் முதலீட்டாளர்களிடம் உள்ள ஒரு பீதியால், தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரிக்கும். முதலீடுகள் எப்போதெல்லாம் அதிகரிக்கிறதோ, அப்போதெல்லாம் தங்கத்தின் விலை அதிகரிக்கக்கூடும் என்றார்.