தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை உச்சத்திற்கு சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில், இந்தியா - பாகிஸ்தான் மோதல் பதற்றம் குறைந்த பிறகு கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை சற்றே குறைந்து வருகிறது. 

இந்த நிலையில், சவரன் தங்கம் நேற்று கிராமிற்கு ரூபாய் 8 ஆயிரத்து 805க்கு விற்கப்பட்டது. சவரன் தங்கம் ரூபாய் 70 ஆயிரத்து 440-க்கு விற்கப்படுகிறது. இந்த நிலையில், இன்றும் சவரன் தங்கம் குறைவாக விற்பனையாகி வருகிறது.  சென்னையில் இன்று சவரன் தங்கம் ரூபாய் 1560 குறைந்துள்ளது. 

70 ஆயிரத்திற்கு கீழ் தங்கம்:

ஒரு கிராம் தங்கம் இன்று சென்னையில் ரூபாய் 8 ஆயிரத்து 610க்கு விற்பனையாகி வருகிறது. இதனால், ஒரு சவரன் தங்கம் ரூபாய் 1560 குறைந்து 68 ஆயிரத்து 880க்கு விற்பனையாகி வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு தங்கம் விலை 70 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. ஆனாலும், ஜிஎஸ்டி வரி உள்ளிட்ட வரிகளுடன் சேர்த்து தங்கம் 70 ஆயிரத்தை கடந்துவிடும் என்பதே உண்மை. தங்கத்தின் விலை மீண்டும் சறுக்கினால் மட்டுமே சாமானிய மற்றும் நடுத்தர மக்கள் தங்கம் வாங்க இயலும் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

இன்னும் குறையுமா?

கடந்த பல நாட்களாவே தங்கம் விலை 70 ஆயிரத்திற்கு மேலேயே விற்பனையாகி வந்தது. இந்த நிலையில், இன்று 22 காரட் தங்கம் 70 ஆயிரத்திற்கு கீழே சவரன் விற்பனைக்கு வந்துள்ளது. 24 காரட் தங்கம் கிராமிற்கு ரூபாய் 9 ஆயிரத்து 393க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூபாய் 75 ஆயிரத்து 144க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி இன்று ரூபாய் 108க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 1 லட்சத்து 8 ஆயிரத்திற்கு விற்கப்படுகிறது. 

உலகளாவில் காணப்படும் பொருளாதார மந்த நிலை, உக்ரைன் ரஷ்யா போர், இஸ்ரேல் ஹமாஸ் போர், இந்தியா - பாகிஸ்தான் மோதல், ஐரோப்பிய நிதியமைப்புகள் வட்டி விகிதம் குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை ஏறியது. தங்கம் விலை குறிப்பிட்ட அளவிற்கு மேலே சென்றால் நடுத்தர மற்றும் சாமானிய மக்கள் மிகவும் மோசமான நிலைக்குச் செல்ல நேரிடும் என்பதால் தங்கம் விலையை மேலும் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று தொடர்ந்து மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.