தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்வதும், அதே அளவில் குறைவதுமாய், பொதுமக்களுக்கு போக்கு காட்டி வருகிறது. சில நாட்களாக குறைந்து வந்த தங்கத்தின் விலை, நேற்று ஒரே நாளில் 2,000 ரூபாய் கூடி அதிர்ச்சி அளித்தது. இந்நிலையில், இன்று காலையிலேயே சவரனுக்கு 1,800 ரூபாய் குறைந்துள்ளது. இன்றை விலை நிலவரம் குறித்து தற்போது பார்க்கலாம்.
போக்கு காட்டிவரும் தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தினம் தினம் கூடுவதும் குறைவதுமாய் மக்களுக்கு போக்கு காட்டி வருகிறது. கடந்த 21-ம் தேதி, கிராம் 12,000 ரூபாய்க்கு சென்ற நிலையில், ஒரு சவரன் 96,000 ரூபாய்க்கு விற்கப்பட்டது. தெடர்ந்து, 22-ம் தேதி அதிரடியாக விலை குறைந்து, ஒரு கிராம் 11,540 ரூபாயாகவும், ஒரு சவரன் 92,320 ரூபாயாகவும் விற்பனையானது.
இந்நிலையல், 23-ம் தேதி மீண்டும் விலை குநைற்து, ஒரு கிராம் 11,500 ரூபாய்க்கும், ஒரு சவரன் 92,000 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. பின்னர், 24-ம் தேதி மீண்டும் விலை குறைந்து, ஒரு கிராம் 11,400 ரூபாய்க்கும், ஒரு சவரன் 91,200 ரூபாய்க்கும் விற்பனையானது. 25-ம் தேதி சற்று விலை உயர்ந்து, ஒரு கிராம் 11,500 ரூபாய்க்கும், ஒரு சவரன் 92,000 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.
தொடர்ந்து, 26-ம் தேதி அதே விலையில் நீடித்த நிலையில், 27-ம் தேதி மீண்டும் விலை குறைந்தது. அதன்னடி, ஒரு கிராம் 11,450 ரூபாயாகவும், ஒரு சவரன் 91,600 ரூபாயாகவும் விற்பனையானது. இந்நிலையில், 28-ம் தேதி அதிரடியாக விலை குறைந்து, ஒரு கிராம் 11,075 ரூபாய்க்கு சரிந்தது. அதன்படி, ஒரு சவரன் 88,600 ரூபாய்க்கு சரிந்து, பொதுமக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில், 29-ம் தேதியான நேற்று ஒரே நாளில் 2000 ரூபாய் விலை உயர்ந்தது. அதன்படி, தங்கத்தின் விலை கிராமிற்கு 250 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 11,325 ரூபாய்க்கும், சவரனுக்கு 2,000 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 90,600 ரூபாய்க்கும் விற்பனையானது.
தங்கத்தின் இன்றைய விலை என்ன.?
இந்த சூழலில், இன்று காலை தங்கத்தின் விலை சவரனுக்கு 1,800 ரூபாய் விலை குறைந்துள்ளது. அதன்படி, ஒரு கிராமிற்கு 225 ரூபாய் குறைந்து, கிராம் 11,100 ரூபாய்க்கும், ஒரு சவரன் 88,800 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
வெள்ளியின் விலையும் குறைவு
இதேபோல், வெள்ளியின் விலை கிராமிற்கு ஒரு ரூபாய் குறைந்துள்ளது. கடந்த 21-ம் தேதி ஒரு கிராம் வெள்ளி 182 ரூபாயாக இருந்த நிலையில், 22-ம் தேதி 7 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 175 ரூபாய்க்கு வந்தது. தொடர்ந்து, 23-ம் தேதி ஒரு ரூபாய் குறைந்து கிராம் 174 ரூபாய்க்கும், 24-ம் தேதி 4 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 170 ரூபாயை எட்டியது. பின்னர், 27-ம் தேதி வரை அதே விலையில் நீடித்தது.
தொடர்ந்து, 28-ம் தேதி வெள்ளியின் விலை கிராமிற்கு 5 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 165 ரூபாய்க்கு விற்பனையானது. இந்நிலையில், 29-ம் தேதியான நேற்று கிராமிற்கு ஒரு ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 166 ரூபாய்க்கு விற்பனையானது.
இந்நிலையில், இன்று கிராமிற்கு ஒரு ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 165 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 1 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
தங்கம் மற்றும் வெள்ளியின் விலை பொதுமக்களை குழப்பி வரும் நிலையில், இந்த நிலை எப்போதுதான் மாறுமோ என்று மக்கள் புலம்பி வருகின்றனர்.