Gold Rate 8th October: யோவ், இது தங்கத்துக்கே அடுக்காது யா.! ரூ.90,000-த்தை கடந்த தங்கம் விலை - இன்றைய விலை என்ன.?
நடுத்தர மக்களுக்கு கூட இனி தங்கம் எட்டாக்கனி தான் என்று கூறும் அளவிற்கு தங்கத்தின் விலை உச்சத்தை எட்டியுள்ளது. இன்று சவரனுக்கு 800 ரூபாய் உயர்நது, ஒரு சவரன் 90,000 ரூபாயை கடந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் புதிய உச்சங்களை அடைந்து, ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு ஒரு கனவாகவே மாறி வருகிறது. இந்த சூழலில், இன்று சவரனுக்கு மேலும் 800 ரூபாய் விலை உயர்ந்த தங்கம், ஒரு சவரன் 90 ஆயிரத்தை கடந்து பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. இன்றைய விலை நிலவரம் என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.
தினம் தினம் உச்சங்களை தொடும் தங்கத்தின் விலை
தொடர் உயர்வை சந்தித்து புதிய உச்சங்களை தொட்டுவரும் தங்கத்தின் விலை, கடந்த அக்டோபர் 1-ம் தேதி, கிராம் 10,950 ரூபாயாகவும், சவரன் 87,600 ரூபாயாகவும் இருந்தது. 2-ம் தேதியும் அதே விலையில் நீடித்தது.
இந்நிலையில், 3-ம் தேதி விலை சற்று குறைந்து, ஒரு கிராம் 10,900 ரூபாயாகவும், ஒரு சவரன் 87,200 ரூபாயாகவும் விற்பனையானது. 4-ம் தேதி சற்று விலை உயர்ந்து ஒரு கிராம் மீண்டும் 10,950 ரூபாய்க்கும், ஒரு சவரன் 87,600 ரூபாய்க்கும் சென்றது.
தொடர்ந்து 5-ம் தேதி அதே விலையில் நீடித்த தங்கம், 6-ம் தேதியன்று அதிரடியாக விலை உயர்ந்து, புதிய உச்சத்தை அடைந்தது. அதன்படி, ஒரு கிராம் 11,060 ரூபாய்க்கும், ஒரு சவரன் 88,480 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், அன்று மாலையே மீண்டும் விலை உயர்ந்து, சவரன் 89 ஆயிரத்தை அடைந்தது. அதன்படி, ஒரு கிராம் 11,125 ரூபாய்க்கும், ஒரு சவரன் சரியாக 89,000 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, 7-ம் தேதியான நேற்று மீண்டும் விலை உயர்ந்து புதிய உச்சத்திற்க சென்ற தங்கம், ஒரு கிராம் 11,200 ரூபாய்க்கும், ஒரு சவரன் 89,600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
சவரன் ரூ.90,000-த்தை கடந்து புதிய உச்சம்
இந்நிலையில் இன்று மீண்டும் அதிரடியாக விலை உயர்ந்து, ஒரு சவரன் 90 ஆயிரம் ரூபாயை கடந்துள்ளது. அதன்படி, கிராமிற்கு 100 ரூபாய் விலை உயர்ந்து ஒரு கிராம் 11,300 ரூபாய்க்கும், சவரனுக்கு 800 ரூபாய் விலை உயர்ந்து ஒரு சவரன் 90,400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலையும் உயர்ந்து புதிய உச்சம்
தங்கத்துடன் போட்டி போட்டி வெள்ளி விலையும் தொடர்ந்து உயர்ந்து புதிய வரலாற்று உச்சத்தை அடைந்துள்ளது.
கடந்த 1-ம் தேதி கிராம் 161 ரூபாயாக இருந்த வெள்ளி, 2-ம் தேதி கிராமிற்கு 3 ரூபாய் விலை உயர்ந்து 164 ரூபாயை எட்டியது. 3-ம் தேதி கிராமிற்கு 2 ரூபாய் விலை குறைந்து, கிராம் 162 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இந்நிலையில், 4-ம் தேதி மீண்டும் அதிரடியாக கிராமிற்கு 3 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 165 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியது. தொடர்ந்து 5-ம் தேதி அதே விலையில் நீடித்தது.
இந்நிலையில், 6-ம் தேதி மீண்டும் 2 ரூபாய் விலை உயர்ந்து, கிராம் 167 ரூபாயை எட்டியது. அதைத் தொடர்ந்து, 7-ம் தேதியான நேற்று அதே விலையில் நீடித்த வெள்ளி, இன்றும் அதே உச்ச விலையில் நீடிக்கிறது.
அதன்படி, இன்று ஒரு கிராம் வெள்ளி 167 ரூபாயாகவும், ஒரு கிலோ பார் வெள்ளி 1 லட்சத்து 67 ஆயிரம் ரூபாயாகவும் விற்பனையாகிறது.
தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து, 90 ஆயிரம் ரூபாயை கடந்துள்ள நிலையில், விரைவிலேயே ஒரு லட்சம் ரூபாயை எட்டினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்றும் பொதுமக்கள் புலம்பி வருகின்றனர்.





















