சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அன்றாடம் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், அவ்வப்போது புதிய உச்சங்களை தொடும் தங்கத்தின் விலை, இன்று ஒரே நாளில் சவரனுக்கு 840 ரூபாய் உயர்ந்து, வரலாறு காணாத புதிய உச்ச விலையை தொட்டுள்ளது.

Continues below advertisement


தொடர் உயர்வில் தங்கம் விலை... தொடர் சரிவில் மக்களின் நம்பிக்கை...


நடுவில் குறைந்தாலும், தொடர் உயர்வை சந்தித்து வரும் தங்கத்தின் விலை, கடந்த 20-ம் தேதி, கிராமிற்கு 20 ரூபாய் உயர்ந்து, புதிய உச்சமாக 8,310 ரூபாயை எட்டியது. அதன்படி, ஒரு சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து, புதிய உச்ச விலையான 66,480 ரூபாயை எட்டியது.


அதன்பின்னர், கடந்த 21-ம் தேதி கிராமிற்கு 40 ரூபாய் குறைந்து 8,270 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஒரு சவரன் 320 ரூபாய் குறைந்து 66,160 ரூபாய்க்கு விற்பனையானது. 22-ம் தேதி கிராமிற்கு மீண்டும் 40 ரூபாய் குறைந்து, 8,230 ரூபாய்க்கும், ஒரு சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து, சவரன் 65,840-க்கும் விற்பனையாது.


23-ம் தேதி அதே விலையில் நீடித்த நிலையில், 24-ம் தேதி, கிராமிற்கு 15 ரூபாய் குறைந்து  8,215 ரூபாய்க்கும், ஒரு சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து 65,720 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. 25-ம் தேதி கிராமிற்கு 30 ரூபாய் குறைந்து ,185 ரூபாய்க்கும், சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து 65,480 ரூபாய்க்கும் விற்பனையானது.


இதைத் தொடர்ந்து ஏறுமுகத்திற்கு மாறிய தங்கத்தின் விலை, 26-ம் தேதி கிராமிற்கு 10 ரூபாய் உயர்ந்து, 8,195 ரூபாய்க்கும், சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 65,560 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. 27-ம் தேதி கிராமிற்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 8,235 ரூபாய்க்கும், சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 65,880 ரூபாய்க்கும் விற்பனையாது.


இதையடுத்து 28-ம் தேதியான இன்று ஒரே நாளில் பெருமளவிற்கு விலை உயர்ந்துள்ளது.


வரலாறு காணாத உச்ச விலையை தொட்ட தங்கம்


தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் கிராமிற்கு 105 ரூபாய் உயர்ந்துள்ளது. இதையடுத்து, ஒரு கிராம் தங்கத்தின் விலை புதிய உச்சமாக 8,340 ரூபாயை தொட்டுள்ளது. இதன்படி, சவரனுக்கு 840 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் புதிய வரலாற்று உச்சமாக, 66,720 ரூபாயை எட்டியுள்ளது.


தங்கம் விலை அவ்வப்போது சற்று குறைந்தாலும், உயரும்போது பெருமளவில் உயர்ந்து, புதிய உச்சங்களை தொட்டு வருவதால், தங்கம் வாங்குவோர் பெரும் கலக்கமடைந்துள்ளனர்.


ஒரே நாளில் கிராமிற்கு 3 ரூபாய் உயர்ந்த வெள்ளி விலை


இந்நிலையில், வெள்ளியின் விலை கடந்த 22-ல் இருந்து 25-ம் தேதிவரை, ஒரு கிராம் 110 ரூபாய் என்ற ஒரே விலையில் நீடித்து வந்தது. அதன்பின்னர், 26-ம் தேதி ஒரு ரூபாய் உயர்ந்து, கிராம் 111 ரூபாய்க்கு விற்பனையானது. 27-ம் தேதியான நேற்றும் அதே விலையில் நீடித்த வெள்ளியின் விலை, இன்று ஒரே நாளில் கிராமிற்கு 3 ரூபாய் உயர்ந்துள்ளது.


அதன்படி, இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை 114 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை, 1 லட்சத்து 14 ஆயிரம் ரூபாயாக விற்பனையாகிறது.


தங்கம் மற்றும் வெள்ளியின் விலை போட்டி போட்டு உயர்ந்து வருவதால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். நடுவில் குறைவதுபோல் குறைந்து, மீண்டும் உச்ச விலையையே தங்கம் தொடர்ந்து தொட்டு வருவதாகவும், அதனால், இனி தங்கத்தின் விலை குறையும் என்ற நம்பிக்கையை இழந்து விட்டதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர்.