சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அன்றாடம் இருமுறை மாற்றி அமைக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த வாரம் 93 ஆயிரத்திற்குள்ளாகவே இருந்து வந்தது. ஆனால், வார இறுதியில் 93 ஆயிரத்தை தாண்டி, பின் திங்கட்கிழமை விலை குறைந்தது. ஆனால் கடந்த 2 நாட்களில் 2 ஆயிரம் ரூபாய்க்கு மேல் உயர்ந்து, தற்போது 95 ஆயிரத்தை நெருங்குகிறது. இன்று சவரனுக்கு 640 ரூபாய் விலை உயர்ந்துள்ளது.

Continues below advertisement

கடந்த வாரம் குறைந்து மீண்டும் விலை உயர்ந்த தங்கம்

கடந்த வாரத்தின் தொடக்கத்தில், அதாவது 17-ம் தேதி கிராம் 11,540 ரூபாய்க்கும், சவரன் 92,320 ரூபாய்க்கும் விற்கப்பட்ட தங்கம், வெள்ளிக்கிழமை, அதாவது 21-ம் தேதி வரை 93,000 ரூபாய்க்குள்ளாகவே சற்று கூடுவதும், குறைவதுமாய் இருந்து வந்தது. 

இந்நிலையில், வார இறுதியில், 22 மற்றும் 23-ம் தேதிகளில் 93 ஆயிரத்தை கடந்தது. அதன்படி, ஒரு கிராம் 11,630 ரூபாய்க்கும், ஒரு சவரன் 93,040 ரூபாய்க்கும் விற்பனையாது.

Continues below advertisement

பின்னர், இந்த வார தொடக்கத்தில், அதாவது 24-ம் தேதி சவரனுக்கு 880 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 11,520 ரூபாய்க்கும், ஒரு சவரன் 92,160 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, 25-ம் தேதியான நேற்று அதிரடியாக சவரனுக்கு 1,600 ரூபாய் விலை உயர்ந்தது.

அதன்படி, ஒரு கிராம் 11,720 ரூபாய்க்கும், ஒரு சவரன் 93,760 ரூபாய்க்கும் விற்பனையானது. இந்நிலையில், இன்றும் தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்துள்ளது.

தங்கத்தின் இன்றைய விலை

அதன்படி, தங்கம் இன்று கிராமிற்கு 80 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 11,800 ரூபாய்க்கும், ஒரு சவரன் 94,400 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இதன்படி, நேற்றும், இன்றும் மட்டுமே தங்கத்தின் விலை சவரனுக்கு 2,240 ரூபாய் உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வெள்ளி விலையும் இன்று உயர்வு

வெள்ளியின் விலை படிப்படியாக குறைந்து 171 ரூபாயை எட்டிய நிலையில், கடந்த 2 நாட்களில் மட்டும் கிராமிற்க 5 ரூபாய் விலை உயர்ந்துள்ளது.

கடந்த வாரத்தின் தொடக்கத்தில், அதாவது 17-ம் தேதி 173 ரூபாயாக இருந்த ஒரு கிராம் வெள்ளி, விலை கூடுவதும் குறைவதுமாய் இருந்து, வார இறுதியில், அதாவது 22, 23-ம் தேதிகளில் 172 ரூபாயாக இருந்தது.

இந்நிலையில், 24-ம் தேதி மேலும் ஒரு ரூபாய் குறைந்து, கிராம் 171 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஆனால், 25-ம் தேதியான நேற்று கிராமிற்கு 3 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 174 ரூபாய்க்கு சென்றது.

தொடர்ந்து, இன்றும் கிராமிற்கு 2 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 176 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ஒரு லட்சத்து 76 ஆயிரம் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.