சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, புத்தாண்டிற்கு முன்பு அதிரடியாக விலை குறைந்து வந்தது. ஆனால், புத்தாண்டிற்குப் பிறகு மீண்டும் ஏறுமுகத்திற்கு வந்து, இன்று ஒரே நாளில் சவரனுக்கு 1,280 ரூபாய் விலை உயர்ந்து, பொதுமக்களிடையே பீதியை கிளப்பியுள்ளது. தங்கத்தின் தற்போதைய விலை என்ன என்பதை பார்க்கலாம்.
புத்தாண்டிற்குப் பிறகு ஏறுமுகத்தில் தங்கம் விலை
புத்தாண்டிற்கு முன்பாக அதிரடியாக விலை குறைந்த தங்கம், புத்தாண்டு தினத்தில், அதாவது ஜனவரி 1-ம் தேதி 1 லட்சம் ரூபாய்கும் குறைவாக வந்தது. அன்றைய தினம், ஒரு கிராம் தங்கம் 12,440 ரூபாய்க்கும், ஒரு சவரன் 99,520 ரூபாய்க்கும் விற்பனையானது.
ஆனால், 2-ம் தேதி விலை உயர்ந்து, மீண்டும் 1 லட்சம் ரூபாயை தாண்டியது. அன்றைய தினம், ஒரு கிராம் தங்கம் 12,580 ரூபாயாகவும், ஒரு சவரன் 1,00,640 ரூபாயாகவும் விற்கப்பட்டது. தொடர்நது? 3-ம் தேதி சற்று விலை உயர்ந்து, ஒரு கிராம் 12,600 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,00,800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், 4-ம் தேதியான நேற்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் அதே விலையில் நீடித்தது. இந்நிலையில், இன்று காலை, மாலை என ஒரே நாளில் சவரனுக்கு 1,280 ரூபாய் விலை உயர்ந்துள்ளது.
இன்றைய விலை என்ன.?
தங்கத்தின் விலை இன்று காலை கிராமிற்கு 80 ரூபாயும், சவரனுக்கு 640 ரூபாயும் விலை உயர்ந்தது. அதன்படி, ஒரு கிராம் 12,680 ரூபாயாகவும், ஒரு சவரன் 1,01,440 ரூபாயாகவும் விற்கப்பட்டது.
இந்நிலையில், மாலையில் கிராமிற்கு மேலும் 80 ரூபாய் விலை உயர்நது, ஒரு கிராம் 12,760 ரூபாய்க்கும், சவரனுக்கு மேலும் 640 ரூபாய் விலை உயர்ந்து ஒரு சவரன் 1,02,080 ரூபாய்க்கும் எகிறியுள்ளது.
வெள்ளி விலையும் அதிரடி உயர்வு
இதேபோல், வெள்ளி விலையும் இன்று அதிடியாக உயர்ந்துள்ளது. கடந்த 1-ம் தேதி ஒரு கிராம் வெள்ளியின் விலை 256 ரூபாயாக இருந்த நிலையில், 2-ம் 4 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 260 ரூபாய்க்கு விற்பனையானது.
தொடர்ந்து, 3-ம் தேதி சற்று விலை குறைந்து, ஒரு கிராம் 257 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்நிலையில், 4-ம் தேதியான நேற்று அதே விலையில் நீடித்தது.
ஆனால், இன்று ஒரே நாளில் கிராமிற்கு 9 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி 266 ரூபாய்க்கு எகிறியுள்ளது. அதன்படி, ஒரு கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் மற்றும் வெள்ளியின் விலை, புத்தாண்டிற்கு குறைவது போல் குறைந்து, மீண்டும் ஏறுமுகத்திற்கு வந்துள்ளதால், மக்கள் கலக்கமடைந்துள்ளர்.