சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கூடுவதும், குறைவதுமாய் இருந்துவந்த நிலையில், கடநத் சில நாட்களாக விலை குறைந்து வந்ததால் மக்கள் சற்று நிம்மதி அடைந்த நிலையில், இன்று விலை உயர்ந்துள்ளது. ஆனால், வெள்ளியின் விலை இன்றும் குறைந்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை என்ன என்பதை பார்க்கலாம்.

Continues below advertisement

சில நாட்களாக குறைந்து இன்று விலை உயர்ந்த தங்கம்

தங்கத்தின் விலை இந்த வாரத்தின் தொடக்கத்தில், அதாவது கடந்த 5-ம் தேதி ஒரு கிராம் 12,760 ரூபாயாகவும், ஒரு சவரன் 1,02,080 ரூபாயாகவும் இருந்தது. பின்னர், 6-ம் தேதி விலை உயர்ந்து, ஒரு கிராம் 12,830 ரூபாய்க்கு சென்றது. அதன்படி, ஒரு சவரன் தங்கத்தின் விலை 1,02,640 ருபாயாக உயர்ந்தது.

தொடர்ந்து, 7-ம் தேதி சற்று விலை குறைந்து, ஒரு கிராம் 12,800 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,02,400 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில், 8-ம் தேதியான நேற்று, மீண்டும் விலை குறைந்தது.

Continues below advertisement

அதன்படி, கிராமிற்கு 50 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 12,750 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் விலை குறைந்து, ஒரு சவரன் சரியாக 1,02,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த சூழலில், இன்று மீண்டும் விலை உயர்ந்துள்ளது.

தங்கத்தின் இன்றைய விலை என்ன.?

இன்று காலை தங்கத்தின் விலை கிராமிற்கு 50 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் மீண்டும் 12,800 ரூபாயை எட்டியது. அதன்படி, சவரனுக்கு 400 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு சவரன் 1,02,400 ரூபாயாக விற்கப்படுகிறது.

குறைந்த வெள்ளியின் விலை

மறுபுறம், வெள்ளியின் விலை இன்று குறைந்துள்ளது. கடந்த 5-ம் தேதி கிராம் 266 ரூபாயாக இருந்த வெள்ளியின் விலை, 6-ம் தேதி 271 ரூபாய்க்கு எகிறியது. பின்னர், 7-ம் தேதி மேலும்  6 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 277 ரூபாய்க்கு சென்றது.

தொடர்ந்து, 8-ம் தேதியான நேற்று கிராமிற்கு 5 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 272 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று கிராமிற்கு மேலும் 4 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 268 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதன்படி, ஒரு கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 68 ஆயிரம் ரூபாயாக உள்ளது.

தங்கம் மற்றும் வெள்ளி விலை ஒன்றாக உயர்ந்து வந்த நிலையில், இன்று தங்கம் விலை உயர்ந்தாலும், வெள்ளி விலை குறைந்துள்ளது, மக்களுக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது.