தங்கத்தின் விலை சமீபத்தில் பெருமளவில் குறைந்து வந்த நிலையில், இன்று ஒரே நாளில் காலை மற்றும் பிற்பகலில் என சவரனுக்கு மொத்தம் 2,560 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. மறுபுறம், வெள்ளியின் விலை இன்று காலை குறைந்த நிலையில், பிற்பகலில் விலை உயர்ந்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் தற்போதைய விலையை பார்க்கலாம்.

Continues below advertisement

தங்கத்தின் விலை நிலவரம்

  • ஜனவரி 30ஆம் தேதி ஒரு கிராம் 950 ரூபாய்  குறைந்து 15,850 ரூபாய்க்கும், சவரனுக்கு 7,600 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 1,26,800 ரூபாய்க்கும் விற்பனையானது.
  • ஜனவரி 31ஆம் தேதியும மீண்டும் தங்கத்தின் விலையானது கிராமிற்கு 950 ரூபாய் குறைந்து  14,900 ரூபாய்க்கும், சவரனுக்கு 7,600 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 1,19,200 ரூபாய்க்கும் விற்க்கப்பட்டது.
  • ஜனவரி 2ஆம் தேதி தங்கத்தின் விலையானது கிராம் ஒன்றுக்கு 950 ரூபாய் குறைந்து 13,950 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு சவரனுக்கு 7,600 ரூபாய்க்கு குறைந்து ஒரு சவரன் 1 லட்சத்து 11ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
  •  கடந்த 3 நாட்களில் மட்டும் அதிரடியாக 22,800 ரூபாய் குறைந்தது.

இன்றைய தங்கம் விலை

இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலையானது மீண்டும் அதிரடியாக உயர தொடங்கியுள்ளது. அதன்படி, இன்று காலையில் கிராம் ஒன்றுக்கு 80 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 14,030 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.  சவரனுக்கு 640 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு சவரன் 1,12,240 ரூபாய்க்கு விற்பனையானது.

தொடர்ந்து, பிற்பகலிலும் சவரனுக்கு 1,920 விலை உயர்ந்தது. அதன்படி, ஒரு கிராமிற்கு 240 ரூபாய் விலை உயர்ந்து, கிராம் 14,270 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் 1,14,160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Continues below advertisement

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளியின் விலையும் கடந்த 3 நாட்களாக சுமார் ஒரு லட்சம் ரூபாய் அளவிற்கு குறைந்தது. அந்த வகையில் நேற்று வெள்ளி ஒரு கிலோவிற்கு 20ஆயிரம் ரூபாய் குறைந்து ஒரு கிலோ பார் வெள்ளி 3 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை வெள்ளியின் விலை கிராமுக்கு 20 ரூபாய் குறைந்தது. ஒரு கிலோவிற்கு 20 ஆயிரம் குறைந்தது. தொடர்ந்து, பிற்பகலில் அதே 20 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 300 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதன்படி, ஒரு கிலோ பார் வெள்ளி மீண்டும் 3 லட்சத்தை எட்டியது.