இந்திய மக்களும் தங்க நகைகளும்

தங்க நகைகளை மீதான ஆர்வம் இந்திய மக்களிடம் அதிகமாகவே உள்ளது. அந்த வகையில் பண்டிகை தினங்களில் அதிகளவு தங்க நகைகளை வாங்குவார்கள். அதிலும் இந்திய திருமணங்களில் தங்கத்திற்கு என்றே தனி இடமும் உண்டு. எனவே நகைக்கடையில் எப்போதும் கூட்டம் அதிகரித்தே காணப்படும். ஆனால் கடந்த சில வருடங்களாகவே தினந்தோறும் தங்கம் விலை புதிய புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2021ஆம் ஆண்டு 35 ஆயிரம் ரூபாய் என இருந்த தங்கம் விலை, தற்போது 1 லட்சத்து 34ஆயிரத்தை தொட்டு நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.

Continues below advertisement

தங்கம் விலை உயர்வுக்கு காரணம் என்ன.?

இதற்கு முக்கிய காரணமாக டாலருக்கு இணையாக தங்களது நாட்டின் பண மதிப்பை அதிகரிக்க மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்கி குவித்து வருகிறார்கள் இதன் காரணமாக தங்கம் விலை எதிர்பாராத உச்சத்தை தொட்டது. 2026ஆம் இறுதிக்குள் ஒரு சவரன் 2 லட்சத்தை எட்டும் என பொருளாதார ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இந்த நிலைலில் ஈரான்- இஸ்ரேல் போர் காரணமாக தங்கம் விலையானது மீண்டும் உயர வாய்ப்பு இருப்பதாக நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.  

தங்கம் விலை நிலவரம்

  • பிப்ரவரி 6-  சவரனுக்கு 1,280 ரூபாய் குறைந்து 1,19,680 ரூபாய்க்கு விற்பனை
  • பிப்ரவரி 7-  கிராமுக்கு 90 ரூபாய் அதிகரித்து 15,050 ரூபாய்க்கும், சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து 1,20,400 ரூபாய்க்கு விற்பனை
  • பிப்ரவரி 9- கிராம் ஒன்றுக்கு 100 ரூபாய் குறைந்து 14,950 ரூபாய்க்கும், சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து 1,19,600 ரூபாய்க்கு விற்பனை.
  • கிராம் ஒன்றுக்கு 100 ரூபாய் அதிகரித்து 15,050 ரூபாய்க்கும், சவரனுக்கு 800 ரூபாய் உயர்ந்து 1,20,400 ரூபாய்க்கும் விற்பனை.

இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன.?

தங்கத்தின் விலையானது கடந்த சில நாட்களாக குறைந்து வரும் நிலையில், நேற்று மீண்டும் உயர்ந்து நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருந்தது. அந்த வகையில், இன்றும் கிராம் ஒன்றுக்கு 70 ரூபாய் உயர்ந்து 15,120 ரூபாய்கு விற்பனையாகிறது. சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து 1,20,960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

Continues below advertisement

அதேநேரம் வெள்ளி விலையானது எந்தவித மாற்றமின்றி நேற்றைய விலையான கிராம் ஒன்று 300 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளி 3 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.