சென்னையில் நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 267க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று காலை கிராமுக்கு ரூ.10 அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 277க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, சவரன் நேற்று ரூ.34 ஆயிரத்து 136க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.34 ஆயிரத்து 216க்கு விற்பனை செய்யப்படுகிறது.


வெள்ளி விலை இன்று சற்று வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி நேற்று ரூ.70க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று 30 பைசா குறைந்து, கிராமுக்கு ரூ.69.70க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல, ஒரு கிலோ வெள்ளி நேற்று ரூ.70 ஆயிரத்திற்கு விற்கப்பட்டது. இன்று ரூ.300 குறைந்து ரூ.69,700க்கு விற்கப்படுகிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்களிடையே கவலையை அதிகரித்து வருகிறது.