சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 2,200 ரூபாய் குறைந்துள்ளது. நேற்று இதே அளவிற்கு விலை அதிகரித்த நிலையில், இன்று அதே அளவு குறைந்ததால், மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.

Continues below advertisement

தொடர்ந்து பயமுறுத்திவரும் தங்கத்தின் விலை

தங்கத்தின் விலை சமீப காலமாக அதிரடியாக உயர்ந்து மக்களை பயமுறுத்தி வருகிறது. கடந்த 16-ம் தேதி சவரன் 70 ஆயிரத்தை கடந்து, 70,520 ரூபாயாக உயந்தது. ஒரு கிராம் 8,815 ரூபாயாக இருந்தது. 17-ம் தேதி அதிரடியாக கிராமிற்கு 105 ரூபாய் உயர்ந்து 8,920 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு சரவன் 840 ரூபாய் உயர்ந்து 71 ஆயிரத்தை கடந்து 71,360 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

18-ம் தேதி கிராமிற்கு 25 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 8,945 ரூபாய்க்கும், சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து 71,560 ரூபாய்க்கும் விற்பனையானது. பின்னர் 19, 20 தேதிகளில் அதே விலையில் நீடித்த தங்கம், 21-ம் தேதி கிராம் 70 ரூபாய் உயர்ந்து 9,015 ரூபாயாக விற்பனையானது. ஒரு சவரன் தங்கம் 560 ரூபாய் உயர்ந்து, சவரன் 72,120 ரூபாய் என்ற வரலாறு காணாத உச்ச விலையில் விற்கப்பட்டது.

Continues below advertisement

தங்கம் 72 ஆயிரம் ரூபாயை தாண்டி விட்டதே என்று மக்கள் அதிர்ச்சியில் இருந்த நிலையில், நேற்று ஒரே நாளில் சவரனுக்கு 2,200 ரூபாய் உயர்ந்ததால், மக்கள் அதிர்ச்சிமேல் அதிச்சி அடைந்தனர். அதன்படி, கிராமுக்கு 275 ரூபாய் உயர்ந்த ஒரு கிராம் 9,290 ரூபாய் என்ற வரலாற்று உச்சத்தை எட்டியது. ஒரு சவரனுக்கு 2,200 ரூபாய் உயர்ந்து சவரன் 74,000 ரூபாயை தாண்டி, 74,320 என்ற வரலாற்று உச்ச விலையை எட்டியது.

இன்று ஆறுதல் அளித்த தங்கத்தின் விலை குறைவு

இப்படி, உச்சகட்ட விலையால் உச்சகட்ட அதிர்ச்சியில் இருந்த மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், நேற்று எவ்வளவு உயர்ந்ததோ, அதே அளவிற்கு இன்று குறைந்துள்ளது தங்கத்தின் விலை. அதன்படி, சவரனுக்கு 2,200 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 72,120 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் விலை 275 ரூபாய் குறைந்து, கிராம் 9,015 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

வெள்ளி விலையில் மாற்றமில்லை

வெள்ளியின் விலை கடந்த 15-ம் தேதியிலிருந்து, 20-ம் தேதி வரை, கிராம் 110 ரூபாயாகவும், ஒரு கிலோ பார் வெள்ளி 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயாகவும் விற்பனையாகி வந்தது. இந்த நிலையில், 21-ம் தேதி கிராமிற்கு ஒரு ரூபாய் உயர்ந்து, கிராம் 111 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஒரு கிலோ பார் வெள்ளி 1 லட்சத்து 11 ஆயிரம் ரூபாயாகவும் இருந்தது. இந்த நிலையில் வெள்ளியின் விலை நேற்றும், இன்றும் மாற்றமின்றி கிராம் அதே 111 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

தங்கத்தின் விலை தொடர்ந்து தாறுமாறாக உயர்ந்து வந்த நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு 2,200 ரூபாய் குறைந்ததால், மக்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர். எனினும், வரும் நாட்களில் எந்த அளவிற்கு உயருமோ என்ற அச்சமும் நிலவுகிறது.