சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை தொடர் ஏறுமுகத்தில் இருந்து, புதிய வரலாற்கு உச்ச விலைகளை எட்டிவந்த நிலையில், நேற்று, இன்று என 2 நாட்களில் மட்டும் 2,000 ரூபாய் குறைந்துள்ளது. அதன்படி, இன்றைய விலை நிலவரம் என்ன என்பதை பார்க்கலாம்.


தொடர்ந்து உயர்ந்து பயம் காட்டிவந்த தங்கத்தின் விலை


ஆபரணத் தங்கத்தின் விலை தினமும் மாற்றியமைக்கப்படும் நிலையில், இந்த வாரத்தின் தொடக்க நாளான 31-ம் தேதி 67,000 ரூபாயை கடந்து புதிய உச்சத்தை அடைந்தது. அன்று ஒரு கிராமிற்கு 65 ரூபாய் உயர்ந்து, 8,425 ரூபாய் என்ற புதிய உச்ச விலையை எட்டியது. ஒரு சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து, 67,400 என்ற புதிய வரலாற்று உச்ச விலையை அடைந்தது தங்கம்.


மீண்டும் அன்று மாலையே கிராமிற்கு 25 ரூபாயும், சவரனுக்கு 200 ரூபாயும் உயர்ந்து, ஒரு கிராம் 8,450 ரூபாயாகவும், சவரன் 67,600 ரூபாய் என்ற புதிய உச்சத்தை அடைந்தது.


இந்த நிலையில், 1-ம் தேதி கிராமிற்கு 60 ரூபாய் உயர்ந்து 8,510 என்ற புதிய உச்சத்திலும், சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 68,080 என்ற புதிய உச்ச விலையிலும் தங்கம் விற்பனையானது. தொடர்ந்து 2-ம் தேதி அதே விலையில் நீடித்த நிலையில், 3-ம் தேதி ஒரு கிராம் தங்கத்தின் விலை 50 ரூபாய் உயர்ந்து, 8,560 என்ற புதிய உச்ச விலையை அடைந்தது. அதன்படி, ஒரு சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து, 68,480 என்ற புதிய வரலாற்று உச்ச விலையை தங்கம் அடைந்தது.


அதிரடியாக 2 நாட்களில் ரூ.2000 குறைந்த தங்கம் விலை


இந்த சூழலில், 4-ம் தேதியான நேற்று ஒரே நாளில் அதிரடியாக ஆயிரம் ரூபாய்க்கு மேல் குறைந்தது தங்கம் விலை. அதன்படி, கிராமிற்கு 160 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 8,400 ரூபாயாகவும், சவரனுக்கு 1,280 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 67,200 ரூபாயாகவும் குறைந்தது.


இந்நிலையில், இன்றும் கிராமிற்கு 90 ரூபாய் விலை குறைந்துள்ளது. அதன்படி, இன்று ஒரு கிராம் 8,310 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல், சவரனுக்கு 720 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 66,480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.


இதன்படி, கடந்த 3-ம் தேதி 68,480 என் புதிய வரலாற்று உச்ச விலையை அடைந்த தங்கம், இரண்டே நாட்களில் 2 ஆயிரம் ரூபாய் குறைந்து, தற்போது 67 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையை அடைந்துள்ளதால், பொதுமக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.


வெள்ளியின் விலையும் கனிசமாக குறைவு


இதேபோல், வாரத்தின் தொடக்கத்தில், அதாவது 31-ம் தேதி 113 ரூபாயாக இருந்த வெள்ளியின் விலை, 1-ம் தேதி கிராமிற்கு ஒரு ரூபாய் உயர்ந்து, 114 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை 1 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது. தொடர்ந்து, 2-ம் தேதி அதே விலையில் நீடித்த நிலையில், 3-ம் தேதி கிராமிற்கு 2 ரூபாய் குறைந்தது. அதன்படி, ஒரு கிராம் 112 ரூபாயாகவும், ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை 1 லட்சத்து 12 ஆயிரம் ரூபாயாக விற்பனையானது.


இந்நிலையில், 4-ம் தேதியான நேற்று ஒரே நாளில் கிராமிற்கு 4 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 108 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 1 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது. இதைத் தொடர்ந்து, இன்று அதிரடியாக கிராமிற்கு 5 ரூபாய் குறைந்துள்ள வெள்ளி, ஒரு கிராம் 103 ரூபாயாகவும், ஒரு கிலோ பார் வெள்ளி 1 லட்சத்து 3 ஆயிரம் ரூபாயாகவும் விற்பனையாகிறது.


தங்கம், வெள்ளி விலை குறைவால் பொதுமக்கள் ஆறுதல்


அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்த பரஸ்பர வரிகளால், உலகம் முழுவதிலும் பங்குச் சந்தைகள் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. இந்நிலையில், தங்கம், வெள்ளியின் விலை பயங்கரமாக உயருமோ என்ன மக்கள் அச்சத்துடன் இருந்தனர். ஆனால், எதிர்பார்த்ததற்கு நேர் மாறாக, தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிரடியாக குறைந்துள்ளது, பொதுமக்களுக்கு சற்று ஆறுதலான விஷயமாக அமைந்துள்ளது.