சென்னையில் நேற்று 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.4,430க்கும், சவரன் ரூ.35,440-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.208 உயர்ந்து ரூ.35,648-க்கும், ஒரு கிராம் ரூ.26 உயர்ந்து ரூ.4,456-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கம் நேற்று ஒரு கிராம் ரூ.4,789க்கும், சவரன் ரூ.38,312-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்று ஒரு கிராம் ரூ.4,815-க்கும், சவரன் ரூ.38,520-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல், வெள்ளி நேற்று ஒரு கிராம் ரூ.73.30-க்கும், கிலோ ரூ.73,300-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.73.90-க்கும், கிலோ வெள்ளியின் விலை ரூ.600 உயர்ந்து ரூ.73,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது, கொரோனா இரண்டாவது அலை பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால், முதலீட்டாளர்கள் மற்ற எதிலும் முதலீடு செய்யாமல் தங்கத்தின் மீது முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தங்கத்தின் விலை ஏறுமுகத்தில் உள்ளது. வாரத்தின் நான்காவது நாளான இன்று வர்த்தகம் தொடங்கியதும் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு சென்செக்ஸ் குறியீடு 597.77 புள்ளிகள் (1.14%) அதிகரித்து 50,331.61 புள்ளிகளாக காணப்பட்டன. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி குறியீட்டு எண் 158.15 புள்ளிகள் (1.06%) அதிகரித்து 15,022.70 புள்ளிகளாக இருந்தது.
கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலையில் நாடு சிக்கி தவிக்கும் நிலையில், நான்காவது நாளாக பங்குகள் உயர்ந்து லாபத்துடன் மற்றும் பங்குகள் விற்பனை லாபத்துடன் காணப்படுவது முதலீட்டாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தற்போதைய நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 68.82 (0.14%) புள்ளிகள் உயர்ந்து 49,802.66 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. இதேபோல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி −34.95 (0.24%) புள்ளிகள் குறைந்து 14,821.20 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.