தங்கம் விலை உயர காரணம் என்ன.?

தங்கத்தின் மீதான மதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக ஒரு சவரன் 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் என்ற அளவில் விற்பனை செய்யப்பட்ட நிலையில், 2026ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஒரு சவரன் 1.34 லட்சம் என்ற புதிய உச்சத்தை தொட்டது. ஆனால் அடுத்த சில வாரங்களில் பொருளாதார மாற்றங்களால் தங்கத்தின் விலையானது குறைய தொடங்கியது. குறிப்பாக அமெரிக்கா- ஈரான் போர் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கத்திற்கு பதிலாக கச்சா எண்ணெய் மீது தங்களது முதலீட்டை அதிகரிக்க செய்தனர்.

Continues below advertisement

மீண்டும் உயரும் தங்கம் விலை

இதனால் தங்கம் விலையானது சற்று குறைந்தது. தற்போது போர் பதற்றம் ஓய்ந்திருப்பதால் மீண்டும் தங்கத்தின் விலையானது அதிகரிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நாள் ஒன்றுக்கு 1000 ரூபாய் அளவில் தங்கத்தின் விலையானது உயர்ந்து வருகிறது. இதனால் கடந்த 15 நாட்களில் மட்டும் சுமார் 13 ஆயிரம் ரூபாய் அளவிற்கு தங்கம் விலையானது அதிகரித்துள்ளது. 

தொடர்ந்து உச்சத்தை தொடும் தங்கம் விலை

  • ஆகஸ்ட் 19 -ம் தேதி காலையில் ஒரு சவரன் 1,13,640 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், மாலையில், சவரனுக்கு 1,560 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு சவரன், 1,15,200 ரூபாய்க்கு விற்பனை.
  • ஆகஸ்ட் 20 ஆம் தேதி கிராம் ஒன்றுக்கு 200 ரூபாய் உயர்ந்து 14,600 ரூபாய்க்கும், சவரனுக்கு 1600 ரூபாய் அதிகரித்து 1,16,800 ரூபாய்க்கு விற்பனை.
  • ஆகஸ்ட் 21-ம் தேதி கிராம் ஒன்றுக்கு 250 ரூபாய் உயர்ந்து 14,850 ரூபாய்க்கும், சவரனுக்கு 2000 ரூபாய் உயர்ந்து 1,18,800 ரூபாய்க்கு விற்பனை.
  • ஆகஸ்ட்22 ம்- தேதி கிராம் ஒன்றுக்கு 100 ரூபாய் உயர்ந்து 14,950 ரூபாய்க்கும், சவரனுக்கு 800 ரூபாய் அதிகரித்து 1,19,600 ரூபாய்க்கு விற்பனை.

இன்றைய தங்கம் விலை

தங்கத்தின் விலையானது கடந்த 3 வாரங்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது அந்த வகையில் கடந்த 15 நாட்களில் மட்டும் சவரனுக்கு 15 ஆயிரம் ரூபாய் உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இன்று வாரத்தின் முதல் நாள் தங்கத்தின் விலையானது உயர்ந்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 80 ரூபாய் உயர்ந்து 15,030 ரூபாய்க்கும், சவரனுக்கு 640 ரூபாய் அதிகரித்து 120,240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Continues below advertisement

வெள்ளி விலை என்ன.?

வெள்ளியின் விலையும் இன்று அதிகரித்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 5 ரூபாய் உயர்ந்து 275 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளிக்கு 5 ஆயிரம் அதிகரித்து 2 லட்சத்து 75 ஆயிர்ம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.