ஏறி இறங்கும் தங்கம் விலை

தங்கத்தின் மீதான மதிப்பு நாளுக்கு உயர்ந்து வருகிறது. இதன் காரணமாகவே தங்கத்தை மக்கள் அதிகளவு வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர். குறிப்பாக மற்ற நாடுகளை விட இந்திய மக்கள் தங்கத்தின் மீது அதிகளவு நாட்டம் கொண்டவர்களாக உள்ளனர். திருமண நிகழ்வுகள், தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் தங்கத்திற்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுத்து வாங்குவார்கள். தங்களின் குழந்தைகளுக்கு எதிர்கால சேமிப்பாக தங்கத்தை இந்திய மக்கள் பார்க்கிறார்கள். மேலும் அத்தியாவசிய தேவைக்கு உடனடியாக தங்கத்தை அடகு வைக்கவும், விற்பனை செய்யவும் பெரிய அளவில் உதவியாக உள்ளது.  

Continues below advertisement

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடமுடியாத உச்சத்தை தொட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக டாலருக்கு நிகராக தங்கள் நாட்டின் பணத்தின் மதிப்பை அதிகரிக்க மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்கி குவித்தார். இதனால் தங்கம் விலை கடந்த மாதம் புதிய உச்சமாக ஒரு சவரன் 1.34 லடசத்தை தொட்டது. ஆனால் அடுத்த சில நாட்களிலேயே தங்கம் விலை அடுத்தடுத்து குறைய தொடங்கியது. இந்த சூழலில் தான் ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா போர் காரணமாக தங்கம் விலையானது எந்த நேரத்திலும் மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தங்க நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். 

 கடந்த வாரம் தங்க நகை நிலவரம்

  • பிப்ரவரி 2- சவரனுக்கு 920 ரூபாய் குறைந்து 1,25,280 ரூபாய்க்கு விற்பனை
  • பிப்ரவரி 3 -  சவரனுக்கு 1560 ரூபாய் குறைந்து 1,23,720 ரூபாய்க்கு விற்பனை
  • பிப்ரவரி 4- சவரனுக்கு 2,160 ரூபாய் குறைந்து 1,21,600 ரூபாய்க்கு விற்பனை
  • பிப்ரவரி 5- சவரனுக்கு 640 ரூபாய் குறைந்து 1,20, 960 ரூபாய்க்கு விற்பனையாகிறது
  • பிப்ரவரி 6-  சவரனுக்கு 1,280 ரூபாய் குறைந்து 1,19,680 ரூபாய்க்கு விற்பனை
  • பிப்ரவரி 7-  வார இறுதி நாளில் கிராமுக்கு 90 ரூபாய் அதிகரித்து 15,050 ரூபாய்க்கும், சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து 1,20,400 ரூபாய்க்கு விற்பனை

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

தங்கத்தின் விலையானது கடந்த வாரதித்ல 5 நாட்களாக தொடர்ந்து குறைந்து நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சி கொடுத்தது. ஆனால் வாரத்தின் இறுதி நாளான கடந்த சனிக்கிழமை தங்கம் விலை திடீரென உயர்ந்து ஷாக் கொடுத்து. இந்த நிலையில் இன்று வாரத்தின் முதல் நாள் திங்கட்கிழமை தங்கத்தின் விலையானது குறைந்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 100 ரூபாய் குறைந்து 14,950 ரூபாய்க்கும், சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து 1,19,600 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 

Continues below advertisement

அதேநேரம் வெள்ளியின் விலையானது எந்தவித மாற்றமும் இன்றி கிராம் ஒன்று 290 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 90 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.