தங்கம் விலை நிலவரம்
- ஆகஸ்ட் 14 -ம் தேதி கிராமுக்கு 45 ரூபாய் குறைந்து 14,125 ரூபாய்க்கும், சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து 1,13,000 ரூபாய்க்கு விற்பனை.
- ஆகஸ்ட் 15 -ம் தேதி கிராமுக்கு 85 ரூபாய் குறைந்து 14,040 ரூபாய்க்கும், சவரனுக்கு 680 ரூபாய் குறைந்து 1,12,320 ரூபாய்க்கு விற்பனை.
- ஆகஸ்ட் 16 -ம் தேதி கிராமுக்கு 25 ரூபாய் அதிகரித்து 14,065, ரூபாய்க்கும், சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து 1,12,520 ரூபாய்க்கு விற்பனை.
- ஆகஸ்ட் 17-ம் தேதி கிராமுக்கு 55 ரூபாய் குறைந்து 14,010 ரூபாய்க்கும், சவரனுக்கு 440 ரூபாய் குறைந்து 1,12,080 ரூபாய்க்கு விற்பனை.
இன்றைய தங்கம் விலை என்ன.?
தங்கத்தின் விலையானது கடந்த மாதம் இறுதியில் தொடர்ந்து அதிகரித்து வந்த நகைப்பிரியர்களை அதிர வைத்த நிலையில், தற்போது தங்கத்தின் விலையானது குறைய தொடங்கியுள்ளது. அந்த வகையில் நேற்று குறைந்த தங்கம் விலை இன்று தங்கத்தின் விலையானது உயர்ந்துள்ளது. கிராமுக்கு 145 ரூபாய் அதிகரித்து 14,155 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,160 ரூபாய் உயர்ந்து 1,13,240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது
இதே போல வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. இன்று கிராம் ஒன்றுக்கு 5ரூபாய் அதிகரித்து 255 ரூபாய்க்கும் கிலோ பார் வெள்ளிக்கு 5 ஆயிரம் ரூபாய் உயர்ந்து 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
