தங்கம் விலை நாளுக்கு நாள், இல்லையில்லை மணிக்கு மணி உயர்ந்து கொண்டேதான் இருக்கிறது. இன்னும் கொஞ்சம் முன்பாகவே வாங்கி இருக்கலாமோ என்று ஒவ்வொரு நாளும் எண்ண வைக்கிறது தங்கத்தின் விலை.
சரி தங்கம் விலை உயர்ந்துகொண்டே என்ன காரணம்?
மற்ற எந்த முதலீட்டைக் காட்டிலும் தங்க செல்லமுதலீடு அதிக லாபகரமானதாகப் பார்க்கப்படுகிறது. உலக அளவிலான சூழல், போர் பதற்றம், அரசியல் காரணங்கள், அமெரிக்க அதிபரின் அதிகப்படியான வரி, இந்தியர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நிச்சயமற்ற நிலை, ஃபெடரல் ரிசர்வ் வங்கி குறைத்திருக்கும் வட்டி விகிதம், உலக அளவிலான சந்தையில் தங்கத்திற்கு ஏற்பட்டிருக்கும் தேவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறிக்கொண்டே செல்கிறது.
கடந்த கால வரலாறு சொல்வது என்ன?
2005 ஆம் ஆண்டு நகைகள் செய்யப் பயன்படுத்தப்படும் 22 கேரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 240 ரூபாயாக இருந்தது ஒரு சவரன் விலை 5,130 ரூபாயாக இருந்தது. அடுத்த ஐந்து வருடத்தில் 2010ஆம் ஆண்டு ஒரு கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை 1,691 ஆக உயர்ந்தது ஒரு சவரன் தங்கத்தின் விலை 13 ஆயிரத்து 528-க்கு விற்பனையானது. 2005 முதல் 2010ஆம் ஆண்டு வரையிலான 5 ஆண்டு இடைவெளியில் தங்கத்தின் விலை சுமார் 160 சதவீதம் உயர்ந்தது.
அடுத்தது 2015-ல் 22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 2,410 ரூபாயாகவும் ஒரு சவரன் தங்கத்தின் விலை 19,723 ரூபாயாகவும் அதிகரித்தது. 2010 முதல் 2015ஆம் ஆண்டு வரை 5 ஆண்டு இடைவெளியில் தங்கத்தின் விலை சுமார் 42 சதவீதம் அதிகரித்தது.
பின்னர் 2020ஆம் ஆண்டு ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 36 ஆயிரம் ரூபாயாக அதிகரித்தது. அப்போது ஒரு கிராம் தங்கத்தின் விலை நான்காயிரத்து ஐநூறு ரூபாயாக இருந்தது. அந்த ஐந்து ஆண்டுகளில் தங்கத்தின் விலை சுமார் 86 சதவீதம் அதிகரித்தது. அதற்கு அடுத்தபடியாக 2020 முதலாகவே பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலையில் தொடர்ச்சியாக ஏற்ற இறக்கங்கள் நிலவை வந்தது.
135 சதவீதம் உயர்வு
கொரோனா பெருந்தொற்று, உக்ரைன் ரஷ்யா இடையிலான போ,ர் உலக அளவிலான அரசியல் காரணங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் காரணமாக தங்கத்தின் விலை கன்னாபின்னாவினே உயர்ந்தது. தற்போது 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாத நிலவரத்தின்படி, ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை 10 ஆயிரம் ரூபாயை கடந்து 10,510 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. அதேபோல ஒரு சவரனின் நிலை 85 ஆயிரத்தை தொட்டுள்ளது.
ஒரே ஆண்டில் 48 சதவீதம் உயர்வு
இந்த ஐந்து ஆண்டுகளில் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட 135 சதவீதம் உயர்ந்துள்ளது கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு சவரன் தங்கத்தின் விலை 56 ஆயிரம் ரூபாயாக இருந்த நிலையில் தற்போது ஒரு சவரன் தங்கத்தின் விலை 85 ஆயிரம் ரூபாயை எட்டியுள்ளது. ஒரே ஆண்டில் 48 சதவீதம் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.
விலை ஏறிக்கொண்டே இருக்குமா?
தினசரி தங்கத்தின் விலை ஏறிக்கொண்டே இருக்கும் நிலையில், அதன் விலை உயர்வு ஒரு கட்டத்தில் சில காலத்துக்கு அப்படியே இருக்குமா என்பதுதான் இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி. அதற்கு நிபுணர்கள் சொல்வது என்ன?
அடுத்த ஓர் ஆண்டுக்கு தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறு முகத்திலேயே இருக்கும் என்றுதான் கூறுகின்றனர். இன்றைய விலையில் இருந்து இன்னும் 15 முதல் 20% வரை தங்கத்தின் விலை ஏறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 13 ஆயிரம் ரூபாய் வரை செல்லும் என்று நிபுணர்கள் கணிக்கின்றனர். குறிப்பாக பவுன் ஒரு லட்சம் ரூபாயை வெகு விரைவில் தொடுவது உறுதி என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு அதிக நாட்கள் எதுவும் ஆகாது. ஓரிரு மாதங்களிலேயே தங்கம் விலை லட்சம் ரூபாயைத் தொடும் என்கின்றனர்.
அதேபோல, தங்கத்தின் விலை கிராமுக்கு 13 ஆயிரம் ரூபாயை எட்டிய பிறகு அந்த இடத்தில் ஒரு தேக்கம் வரலாம். சில காலம் மட்டும் 13 ஆயிரம் ரூபாயை ஒட்டியே பயணிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது ஒரு பவுன் தங்கத்தின் விலை ஒரு லட்சம் ரூபாயை சுற்றி சில காலத்துக்கு இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.
2030ஆம் ஆண்டில் எப்படி?
சரி, அடுத்த ஐந்து ஆண்டுகள் கழித்து அதாவது, 2030ஆம் ஆண்டு தங்கத்தின் விலை என்னவாக இருக்கும்? இதில் பல உள்ளூர் மற்றும் வெளிநாட்டு காரணிகள் உள்ளன. அமெரிக்க அதிபராக டிரம்ப பதவி வகித்து வரும் சூழலில் தங்கத்தின் விலை மேலும் உயர்ந்து கொண்டேதான் இருக்கும் என்று கூறப்படுகிறது. 2030ஆம் ஆண்டு ஒரு சவரன் தங்கத்தின் விலை ஒரு லட்சத்து 25 ஆயிரத்து எட்டும் என்று கணிக்கப்படுகிறது. அதேபோல ஒரு கிராம் தங்கத்தின் விலை 15,500 ஆக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
வீடியோ வடிவில் காண