தொடர்ந்து உயரும் தங்கம் விலை
- ஆகஸ்ட் 4-ம் தேதி கிராம் ஒன்றுக்கு 50 ரூபாய் குறைந்து 13,200 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து 1,05,600க்கு விற்பனை.
- ஆகஸ்ட் 5 ஆம் தேதி சவரனுக்கு 2,240 ரூபாய் உயர்ந்து 1,07,840 ரூபாய்க்கு விற்பனை.
- ஆகஸ்ட் 6-ம் தேதி கிராம் ஒன்றுக்கு 270 ரூபாய் உயர்ந்து 13,750 ரூபாய்க்கும், சவரனுக்கு 2,160 ரூபாய்
- அதிகரித்து 1,10,000 ரூபாய்க்கு விற்பனை.
- ஆகஸ்ட் 7ஆம் தேதி கிராம் ஒன்றுக்கு 150 ரூபாய் உயர்ந்து 13,900 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,200 ரூபாய் அதிகரித்து 1,11,200 ரூபாய்க்கு விற்பனை
இன்றைய தங்கம் விலை
தங்கத்தின் விலையானது கடந்த 5 நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் இன்று வாரத்தின் இறுதி நாளும் தங்கம் விலை அதிகரித்துள்ளது. அந்த வகையில் கிராமுக்கு 65 ரூபாய் உயர்ந்து 13,965 ரூபாய்க்கும், சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து 1,11,720 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
அதே நேரம் வெள்ளி விலையானது எந்த வித மாற்றமும் இல்லாமல் கிராம் ஒன்று 250 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
