தங்கத்தில் தொடரும் முதலீடு

தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. அந்த வகையில் கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக ஒரு சவரன் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் அடுத்த 3 வருடங்களில் பல மடங்கு தங்கத்தின் விலையானது உயர்ந்தது. 2026ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஒரு சவரன் 1.34 லட்சத்தை எட்டி நகைப்பிரியர்களை அதிர்ச்சி அடைய செய்தது. இந்த நிலையில் தங்கத்தின் விலையானது அடுத்த 6 மாதத்தில் 2 லட்சத்தை எட்டும் என கணிக்கப்பட்டது.

Continues below advertisement

குறையும் தங்கம் விலை- காரணம் என்ன.?

ஆனால் திடீர் மாற்றமாக தங்கத்தின் விலையானது சரிந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக கச்சா எண்ணெய்யின் விலையானது தொடர்ந்து அதிகரித்து வருவதால் முதலீட்டாளர்கள் அதிகளவு கச்சா எண்ணெய் மீது முதலீடு செய்து வருகிறார்கள். இதனால் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்யப்படாத காரணத்தால் தங்கத்தின் விலையானது குறைந்து வருவதாக பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.    

கடந்த ஒரு வாரத்தில் தங்க நகை நிலவரம்

  • ஜூன் 1- ஆம் தேதி- கிராம் ஒன்றுக்கு 130 ரூபாய் குறைந்து 14,500 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,040 ரூபாய் குறைந்து 1,16,040 ரூபாய்க்கு விற்பனை.
  • ஜூன் 2- ஆம் தேதி தங்கத்தின் விலையில் மாற்றமில்லை
  • ஜூன் 3- ஆம் தேதி தங்கத்தின் விலை மாற்றமில்லை
  • ஜூன்- 4-ஆம் தேதி கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து 14,480 ரூபாய்க்கும், சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 1,15,840 ரூபாய்க்கு விற்பனை
  • ஜூன் 5-ஆம் தேதி கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.14,430-க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,15,440-க்கும் விற்பனை
  • ஜூன்- 6ஆம் தேதி கிராமுக்கு 230 ரூபாய் குறைந்து 14,200 ரூபாய்க்கும், சவரனுக்கு 1840 ரூபாய் குறைந்து 1,13,600 ரூபாய்க்கு விற்பனை
  • ஜூன்- 7 ஆம் தேதி தங்கம் விலை மாற்றமில்லை

இன்றைய தங்கம் விலை என்ன.?

ஜூன் 8ஆம் தேதியான இன்று தங்கம்  கிராமுக்கு 130 ரூபாய் குறைந்து 14,070 ரூபாய்க்கும், சவரனுக்கு 1040 ரூபாய் குறைந்து 1,12,560 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 

Continues below advertisement

அதே நேரம் வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் 270 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 70ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.