புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் புதிய புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இதன் காரணமாக நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்து வருகிறது தங்கம் மற்றும் வெள்ளி விலை. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒரு சவரன் 50ஆயிரம் ரூபாய் என இருந்த தங்கம் விலை, தற்போது ஒரு சவரன் 1 லட்சத்து 34ஆயிரம் என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதன் காரணமாக நடுத்தர வர்க்க மக்களால் தங்கத்தை வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.தங்களது வீட்டு விஷேசங்களுக்காக தங்க நகைகளை வாங்க திட்டமிட்டவர்களும் கூடுதலாக பணம் ஒதுக்க வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தங்கத்தின் விலையில் மாற்றங்கள்
- ஜனவரி 30- ஒரு கிராம் 950 ரூபாய் குறைந்து சவரனுக்கு 7,600 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 1,26,800 ரூபாய்க்கும் விற்பனை
- ஜனவரி 31- தங்கத்தின் விலை மீண்டும் 950 ரூபாய் குறைந்து சவரனுக்கு 7,600 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 1,19,200 ரூபாய்க்கும் விற்பனை
- ஜனவரி 1- ஞாயிற்றுக்கிழமை - தங்கம் விலையில் மாற்றம் இல்லை
- ஜனவரி 2- தங்கத்தின் விலையானது கிராம் ஒன்றுக்கு 950 ரூபாய் குறைந்து 13,950 ரூபாய்க்கு விற்பனை. ஒரு சவரன் 1 லட்சத்து 11ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
- 3 நாட்களில் மட்டும் அதிரடியாக 22,800 ரூபாய் குறைந்தது
- ஜனவரி 3- தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு- காலையில் கிராம் ஒன்றுக்கு 80 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 14,030 ரூபாய்க்கு விற்பனை. சவரனுக்கு 640 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு சவரன் 1,12,240 ரூபாய்க்கு விற்பனையானது.
- பிற்பகலிலும் தங்கம் விலை மீண்டும் அதிகரித்தது. ஒரு கிராமிற்கு 240 ரூபாய் விலை உயர்ந்து, கிராம் 14,270 ரூபாய்க்கு விற்பனை. சவரனுக்கு 1,920 விலை உயர்ந்தது. ஒரு சவரன் 1,14,160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளியின் விலையும் சுமார் ஒரு லட்சம் ரூபாய் அளவிற்கு குறைந்து இருந்த நிலையில் நேற்று ஒரு கிலோ வெள்ளிக்கு 20ஆயிரம் ரூபாய் காலையில் குறைந்த நிலையில் மாலையில் 20ஆயிரம் ரூபாய் அதிகரித்து ஒரு கிலோ பார் வெள்ளி 3 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய தங்கம் வெள்ளி விலை
இந்த நிலையில் தங்கத்தின் விலையானது இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் கிராம் ஒன்றுக்கு 630 ரூபாய் உயர்ந்துள்ளது. சவரனுக்கு 5,040 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 19ஆயிரத்து 200 ரூபாய் விற்பனையாகிறது. இதேபோல வெள்ளியின் விலையும் கிராம் ஒன்றுக்கு 20 ரூபாய் அதிகரித்துள்ளது. ஒரு கிலோ பார் வெள்ளிக்கு 20ஆயிரம் ரூபாய் அதிகரித்து 3 லட்சத்து 20ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.