சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் 4 ஆயிரத்து 534க்கு விற்கப்பட்டது. சவரன் ரூபாய் 36 ஆயிரத்து 272க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி சென்னையில் தங்கம் கிராமிற்கு ரூபாய் 32 அதிகரித்து ரூபாய் 4 ஆயிரத்து 566க்கு விற்கப்படுகிறது. அதேபோல, சவரன் ரூபாய் 256 அதிகரித்து ரூபாய் 36 ஆயிரத்து 528க்கு விற்கப்படுகிறது. இதேபோல, 24 கேரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூபாய் 4 ஆயிரத்து 920க்கும், ரூபாய் 39 ஆயிரத்து 360க்கும் விற்கப்படுகிறது. அதேபோல, வெள்ளி கிராமிற்கு ரூபாய் 40 காசுகள் குறைந்து ரூபாய் 72.30க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 72 ஆயிரத்து 300க்கு விற்கப்படுகிறது.
தங்கம் விலை உயர்வு ஏன்?
தங்கம் விலை தொடர்ந்து அதிகரிக்குமா என்பது குறித்து மெட்ராஸ் ஜூவல்லர்ஸ் மற்றும் டைமண்ட் மெர்ச்சன்ட் அசோசியேசன் தலைவர் ஜெயந்திலால் சலானி ஏபிபி நாடுக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் அவர் கூறுகையில், ‛‛பொருளாதார மந்தமான சூழ்நிலை ஏற்படும்போது, பொருளாதார துறையைச் சேர்ந்த பங்குச் சந்தைகள் சரிவை நோக்கிப்போகும். அப்படிப்பட்ட சூழலில் தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரிக்கும். இந்த மாதிரியான சூழ்நிலை தொடர்ந்து நீடித்தால் தங்கம் விலை இன்னும் அதிகரிக்கும். காரணம் முதலீட்டாளர்களிடம் உள்ள ஒரு பீதியால், தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரிக்கும். முதலீடுகள் எப்போதெல்லாம் அதிகரிக்கிறதோ, அப்போதெல்லாம் தங்கத்தின் விலை அதிகரிக்கக்கூடும் என்றார்.