சென்னையில் நேற்று தங்கம் விலை 22 காரட் 4,825க்கு விற்கப்பட்டது. சவரன் தங்கம் விலை ரூபாய் 38,600க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில், நேற்று தங்கம் விலை ஏறிய நிலையில் இன்று சரிவை சந்தித்திருக்கிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ. 4,815க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.38,520க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
24 காரட் தங்கம் கிராமிற்கு ரூபாய் 5,214க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூபாய் 41,712க்கு விற்கப்படுகிறது. அதேபோல், வெள்ளி ஒரு கிராம் ரூபாய் 70.80க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 70,800க்கு விற்கப்படுகிறது. தங்கம் விலை குறைந்திருக்கும் நிலையில், வெள்ளி விலையும் குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பொருளாதார மந்தமான சூழ்நிலை ஏற்படும்போது, பொருளாதார துறையைச் சேர்ந்த பங்குச் சந்தைகள் சரிவை நோக்கிப்போகும். அப்படிப்பட்ட சூழலில் தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரிக்கும். இந்த மாதிரியான சூழ்நிலை தொடர்ந்து நீடித்தால் தங்கம் விலை இன்னும் அதிகரிக்கும். காரணம் முதலீட்டாளர்களிடம் உள்ள ஒரு பீதியால், தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரிக்கும். முதலீடுகள் எப்போதெல்லாம் அதிகரிக்கிறதோ, அப்போதெல்லாம் தங்கத்தின் விலை அதிகரிக்கக்கூடும். அந்த வகையில் உக்ரைன் போர் காரணமாக தொடர்ந்து பங்குச்சந்தைகள் வீழ்ச்சி அடைந்து வருகின்றன. அதனால் தங்கத்தின் விலையும் உயரத் தொடங்கியுள்ளது.
இதனால், கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன. இதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்