பிட்காயின் மற்றும் கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. எனினும் கடந்த சில மாதங்களாக கிரிப்டோ கரன்சி மற்றும் பிட்காயின் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருதாக தகவல் வெளியாகி வந்தது. இது தொடர்பாக ஒரு ஆய்வு நிறுவனமான இம்யூனிஃபை ஒரு ஆய்வை நடத்தியுள்ளது. 


இந்நிலையில் அது தொடர்பாக ஆய்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. சமீப காலங்களாக பிட்காயின் மதிப்பு குறைய இரண்டு முக்கிய காரணங்கள் தெரியவந்துள்ளது. அதாவது கிரிப்டோ கரன்சி மதிப்பு குறைய மோசடி மற்றும் ஹேக்கிங் ஆகிய இரண்டும் மிகவும் முக்கியமான காரணம் என்று தெரிவித்துள்ளது. 






அதில் மோசடி காரணமாக கிரிப்டோ கரன்சியின் மதிப்பு 7 சதவிகிதம் குறைந்துள்ளது. அதேபோல் ஹேக்கிங் காரணமாக சுமார் 93 சதவிகித மதிப்பு குறைந்துள்ளதாக ஆய்வு குறிப்பிட்டுள்ளது. அதாவது மொத்தமாக 428 மில்லியன் டாலர் வரை கிரிப்டோ கரன்சியின் மதிப்பு குறைந்துள்ளது. அவற்றில் சுமார் $399 மில்லியன் டாலர் ஹேக்கிங் மூலம் குறைந்துள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது. இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 3200 கோடி ரூபாய்க்கு மேலாக உள்ளது. மேலும் மோசடி வகையில் சுமார் 29 மில்லியன் டாலர் மதிப்பு குறைந்துள்ளதாக தெரிகிறது. 


இந்த முறை அதிகம் டார்கெட் செய்யப்பட்ட பிட்காயின்களாக எதிரியம், பிஎன்பி செயின் ஆகியவை உள்ளதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. இந்த பாதிப்புகள் அனைத்தும் நோமாட் பிரிட்ஜ் மற்றும் விண்டர்மூட் என்ற இரண்டு திட்டங்கள் மூலம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த அதிரடியாக விலை மதிப்பு குறைவு பல பிட்காயின் மற்றும் கிரிப்டோ கரன்சி முதலீட்டாளர்கள் சற்று அதிர்ச்சியாக உள்ளனர்.