ஆண்களுக்கு நிகராக பெண்களும் அனைத்து துறைகளிலும் சாதனை படைத்து வருகின்றனர். பெண்கள் தங்கள் சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்ற எண்ணம் தற்போது தழைத்தோங்கியுள்ளது. இதன் விளைவாக பெண் தொழில் முனைவோர்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் அதிகரித்திருக்கிறது. நம்பிக்கையுடன் களமிறக்கி தேசிய மற்றும் சர்வதேச அளவில் சாதனைப்படைத்து வரும் பெண்களும் ஏராளம். ஆனாலும் தொழில் தொடங்க விருப்பம் இருந்தாலும் வறுமையின் பிடியில் சிக்கித்தவிக்கும் பல பெண்களுக்கு இன்னும் அது எட்டாக்கனியாகவே உள்ளது. இப்படியான பெண் தொழில் முனைவோரை ஊக்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் , இந்திய அரசு பல்வேறு கடன் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் நச்சுனு நாலு திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.
1.ஸ்டான்ட் அப் இந்தியா (Stand Up India)
இந்த திட்டமானது கடந்த 2016 அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினை சேர்ந்த மக்கள் பயனடையளாம். பெண்கள் தேர்வு செய்துள்ள தொழிலின் அடிப்படையில் 10 லட்சம் முதல் 1 கோடி அளவிலான கடன் தொகையை பெறலாம். தயாரிப்பு, வர்த்தகம் மற்றும் சேவைகள் பிரிவில் தொழில் தொடங்க விரும்பும் பெண்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். இந்த திட்டம் மூலம் ,கடந்த நான்கு ஆண்டுகளில் 16,712 கோடி ரூபாய் கடன் தொகை வழங்கப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தில் கடன் தொகை பெற்றவர்கள் கடனை திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசம் 7 ஆண்டுகளாகும்
2. யூனியன் நரி சக்தி (Union Nari Shakti)
இந்த திட்டம் மூலம் கடன் தொகையை பெற விரும்புவர்கள் 51 % சதவிகித பங்கினை தாங்கள் தொடங்கும் தொழிலில் பெற்றிருக்க வேண்டும். இதில் சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்கள் மட்டுமல்லாது, மைக்ரோ நிறுவனங்களும் பயனடையலாம். யூனியன் வங்கிகள் , யூனியன் நரி சக்தி திட்டத்திற்கான கடன் தொகையை வழங்குகின்றன. புதிய அலுவக கட்டிடங்கள் வாங்குபவர்கள் அல்லது புதுப்பிப்பவர்கள், தொழிற்சாலைளை அமைக்க விரும்பும் பெண்கள் இதனை பயன்படுத்திக்கொள்ளலாம். இதன் மூலம் 2 லட்சம் முதல் 2 கோடி வரையிலான கடன் தொகை கிடைக்கிறது. இதனை திரும்ப செலுத்துவதற்கான கால அவகாசம் 84 வருடங்கள் ஆகும்.
3.உத்யோகினி திட்டம் (Udyogini Scheme)
இந்த திட்டத்தின் மூலம் கடன் பெற விரும்புபவர்களுக்கு சில நிபந்தனைகள் உள்ளது. அதாவது அவர்களின் ஆண்டு வருமானம் 1.5 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும். மேலும் 25 முதல் 65 வயதிலான பெண்கள் மட்டுமே இதனை பயன்படுத்திக்கொள்ள முடியும். இது கிராமப்புற மற்றும் வளர்ச்சியடையாத பகுதி பெண்களுக்காக உருவாக்கப்பட்டது. இதன் மூலம் 2 லட்சம் கடன் தொகையை பெறலாம்.
4.ஐடிஎப்சி முதல் வங்கி சகி சக்தி (IDFC FIRST Bank Sakhi Shakti)
இந்த திட்டம் கிராமப்புற பெண்களுக்கான கடன் மற்றும் சேவை குறித்த கற்பித்தல்களை வழங்குறது. இந்திய குடியுரிமை ஆவணங்களான ஆதார் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி இந்த திட்டத்தில் கடனுக்கு விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தில் இணைந்த பெண்களுக்கு இத்திட்டம் குறித்த விரிவான விளக்கங்கள் மற்றும் விதிமுறைகள் குறித்து விளக்கப்படும். இதன் மூலம் 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரையிலான கடன் தொகையை பெறலாம்.IDFC வங்கி கடன் தொகையை வழங்குகிறது