ரியல் எஸ்டேட் டெவலப்பர் நிறுவனமானஜி ஸ்கொயர் அரக்கோணத்தில், சென்னை – அரக்கோணம் நெடுஞ்சாலையையொட்டி கட்டுபடியாகக்கூடிய விலையில் ஒரு தொழிற்பூங்கா தொடங்கப்படுவதை  அறிவித்திருக்கிறது.


தொழிலகப் பூங்காவைத் தொடங்கும் இந்த புதிய முயற்சியைத் தொடர்ந்து சென்னை, திருச்சி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய நகரங்களிலும் தனது செயல்பாட்டை விரிவாக்கம் செய்யவும் மற்றும் தொழிலகங்களுக்கான அமைவிடங்களை கட்டுபடியாகக்கூடிய விலையில் வழங்கவும் ஜி ஸ்கொயர் திட்டமிட்டிருக்கிறது. 


அரக்கோணத்தில் தமிழ்நாட்டின் முதன்மையான தொழிலகமையங்களுள் ஒன்று அமைந்துள்ள இப்பகுதியில் ஜி ஸ்கொயரின் தொழிற்பூங்கா நிறுவப்படுகிறது. ரயிலிருந்து சரக்குகளை ஏற்றி இறக்குவதற்கான சைடிங் டிராக், 220KV  மற்றும் 110KV  திறன்கொண்ட துணை மின்நிலையங்கள், மிகச்சிறப்பான நீராதாரங்கள், அனைத்து முன்னணி சேவை வழங்குனர்களின் தொலைத்தொடர்பு இணைப்பு வசதி, ஏற்கனவே நிறுவப்பட்டு இயங்கி வருகின்ற பல்வேறு தொழிலகங்களுக்கு அருகில் அமைந்திருப்பது மற்றும் தொழிலக பூங்காவிற்குள்ளேயே ஒரு பிரத்யேக ஹெலிபேட் போன்ற பல்வேறு வசதிகளை இத்தொழிற்பூங்கா செயல்திட்டம் கொண்டிருப்பதால், தொழில் நிறுவனங்கள் தங்களது தொழிலகங்களை / அலுவலகங்களை நிறுவுவதற்கு இது மிகச்சிறப்பான அமைவிடமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அந்தந்த தொழிலகத்திற்கே உரிய குறிப்பான தேவைகளை பூர்த்தி செய்வதற்கெனவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஒரே நிலத்தொகுப்பில் 400 ஏக்கர்கள் என்ற பரப்பளவிற்குள் 
ஜி ஸ்கொயர் தொழிற்பூங்கா வழங்குகிறது.  லாஜிஸ்டிக்ஸ், ஸ்டீல், சிமெண்ட், பேட்டரி தயாரிப்பு தொழிலகங்கள் மற்றும் இன்னும் பல தொழிற்சாலைகளை நிறுவுவதற்குப் பொருத்தமான அமைவிடமாக இது இருக்கும். வெறும் 10 நிமிட பயண தூரத்தில் NICE சாலை (7 கி.மீ.), பெங்களுரு நெடுஞ்சாலையை பெங்களுரு நெடுஞ்சாலையிலிருந்து வெறும் 40 நிமிட பயண தூரத்தில் (25 கி.மீ) உள்ள வேலங்காடு, புதிதாக அமையவிருக்கும் சாலை இணைப்புவசதி காஞ்சிபுரம், எண்ணூர் மற்றும் மகாபலிபுரத்தை இணைக்கிறவாறு வெங்காத்தூரில் அமையவிருக்கும் புறவழி வட்டச்சாலை, பட்டாபிராம் மற்றும் இத்தொழிற்பூங்காவிலிருந்து 2 மணி நேர பயண தூரத்தில் அமைந்திருக்கும் எண்ணூர் துறைமுகத்தை இணைக்கின்ற வெளிப்புற வட்டச்சாலை என அவசியமான அனைத்து போக்குவரத்து இணைப்பு வசதிகளும் இத்தொழிற்பூங்காவின் அமைவிடச்சிறப்பை உயர்த்துகின்றன.


இத்தொழிற்பூங்கா, அரக்கோணம் இரயில் சந்திப்பு மற்றும் புளியமங்கலம் ரயில் நிலையம் ஆகியவற்றிற்கு மிக அருகில் இருக்கிறது. 2000 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட ஐஎன்எஸ் ராஜாளி அரக்கோணம் கடற்படையின் ஏர் ஸ்டேஷன் உட்பட, மேற்குறிப்பிடப்பட்ட இரயில் நிலையங்கள் அனைத்துமே 5 கி.மீ. தூரத்திற்குள் அமைந்துள்ளன. பல்வேறு தொழிலகங்கள் இயங்கி வரும் இப்பகுதியில் பணியாற்றுவதற்காக திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னையிலிருந்து திறமையும், அனுபவமும் மிக்க பணியாளர்கள் தினசரி வந்து செல்வதால், மிக அதிக எண்ணிக்கையில் பணியாளர்கள் அரக்கோணம் சுற்று வட்டாரத்தில் இருப்பது அனைவரும் அறிந்ததே. இங்கு அமையவிருக்கும் ஜி ஸ்கொரின் தொழிற்பூங்கா அரக்கோணம் நகரிலும் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் வசிக்கும் ஆயிரக்கணக்கான நபர்களுக்கு பணிவாய்ப்புகளை வழங்கும் என்பதால், இப்பகுதி பொருளாதார வளர்ச்சியையும் பெறும் என்பது நிச்சயம். 


ஜி ஸ்கொயர் ரியால்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் – ன் தலைமை செயலாக்க அதிகாரி என். ஈஸ்வர், ஜி ஸ்கொயர் தொழிற்பூங்கா தொடங்கப்படுவது குறித்து கூறியதாவது: “ஜி ஸ்கொர் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் என்பது, ஜி ஸ்கொயர் குழுமத்தின் தொழிலகங்களுக்கான ரியல் எஸ்டேட் பிரிவாகும். தமிழ்நாடெங்கிலும் மிதமான விலைகளில் தொழிலக அமைவிடங்களை நிறுவனங்களுக்கு வழங்குவதின் மீது இப்பிரிவு சிறப்பு கவனம் செலுத்தும். தொடங்கப்படுகின்ற இப்புதிய செயல்திட்டம், சென்னைக்கு அருகே மிக அதிகமாக விரும்பப்படுகின்ற தொழிலகங்களுக்கான நிலப்பிரிவு உள்ள அரக்கோணத்தில் அமைந்துள்ளது. தொழிலகங்களுக்குத் தேவைப்படுகின்ற அனைத்து வசதிகளையும் கொண்டிருக்கும் தமிழ்நாட்டின் முதல் மிதமான விலையில் கிடைக்கக்கூடிய தொழிற்பூங்காவாக அரக்கோணத்தில் ஜி ஸ்கொயர் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் அமைகிறது. தொழிலகங்களை உடனே தொடங்குவதற்கு தயார் நிலையிலுள்ள தொழிலக நிலப்பரப்புகள் கிடைக்கப்பெறுவதில் நிலவுகின்ற சவாலுக்கு இதன் மூலம் தீர்வு காண்பதே ஜி ஸ்கொயரின் நோக்கமாகும். எங்களிடமிருந்து இந்த நிலப்பரப்புகளை தொழிலகங்கள் வாங்கும்போது அச்சொத்து மீது எவ்வித தடைகளோ, வில்லங்கமோ இருக்காது. அதுமட்டுமின்றி, எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி தாங்கள் விரும்புகின்ற வகையில், இந்த இடத்தை உருவாக்கி, கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கு தொழிலகங்களுக்கு முழுமையான சுதந்திரமும் இருக்கும். இந்த அம்சங்களே எம்முடைய புதிய தொழில் முயற்சியான இதில், பிற அமைவிடங்களிலிருந்து எங்களை வேறுபடுத்தி தனிச்சிறப்பானதாக ஆக்குகின்ற முக்கிய அம்சம் என்று நாங்கள் கருதுகிறோம்.“ என தெரிவித்திருக்கிறார்.