இன்றையநிலவரப்படி (17 நவம்பர் 2021) பிட்காயின், எதீரியம். லைட்காயின், ரிப்பள், டாட்ஜ்காயின் மற்றும் இதர டிஜிட்டல் கரன்சிக்களின் விலைமதிப்பு என்ன? ஒவ்வொரு பிட்காயினின் ஒப்பீடு விலை என்ன மற்றும் அனைத்து முக்கிய இந்திய பரிவர்த்தனையில் இதன் சந்தை முதலீட்டு விவரம் குறித்த பல தகவல்களை அறிந்துகொள்வோம்.
இந்தியாவில் கிரிப்டோகரன்சி விலை:
கிரிப்டோகரன்சி சந்தை தொடர்ந்து நிலையற்றதாகவே இருந்து வருகிறது. கரன்சிக்களின் விலையும் அவ்வப்போது மாறியபடியே உள்ளது. கிரிப்டோகரன்சி சந்தையில் பிரபலமான பிட்காயின், ஈதர், டாட்ஜ்காயின், லைட்காயின் மற்றும் ரிப்பள் போன்ற பல்வேறுதரப்பட்ட பணங்களின் நிலையும் இவ்வாறு மாறியபடியே உள்ளது.
கிரிப்டோகரன்சி சந்தையில் ஆதிகாலத்தில் அறிமுகமான பிட்காயின் டோக்கன் விலைமதிப்பு 0.28 சதவிகிதம் மாறியுள்ளது. இந்திய மதிப்பில் ரூபாய் 49,20,051 இருந்த பிட்காயின் தற்போது ரூபாய் 49,33,766 என அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த சந்தை முதலீட்டில் 85.4 பிட்காயின் டோக்கன்கள் முதலீட்டில் உள்ளன. என க்ரிப்டொகரன்சி நிறுவனமான காயின் ஸ்விட்ச் தெரிவித்துள்ளது.
இதன் வழங்குனரைப் பொறுத்து இந்த கிரிப்டோகரன்சிக்களின் விலையும் மாறும் . அதனால் ஒரே வழங்குனரை இதற்குத் தொடர்ச்சியாகப் பின்பற்றுவது மிக முக்கியம். இதுதவிர இதீரியத்தின் விலை 1.47 சதவிகிதம் குறைந்து 3,45,602 ரூபாயாக உள்ளது.டெதரின் விலை 1.81 சதவிகிதம் அதிகரித்து ரூபாய் 82.96 ஆக உள்ளது. ரிப்பளின் விலை 1.62 சதவிகிதம் குறைந்து ₹ 89.69 என உள்ளது.
உலகளாவிய சந்தையில் கிரிப்டோகரன்சியின் மதிப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.இதற்கிடையே க்ரிப்டோ வர்த்தகம் சார்ந்த பிரதிநிதிகள், ப்ளாக்செயின் அண்ட் க்ரிப்டோ அசெட்ஸ் கவுன்சில் என்ற க்ரிப்டோ வர்த்தகக் குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள் முதலானோர் க்ரிப்டோ வர்த்தகம் தொடர்பாக பாஜக தலைவர் ஜெய்ந்த் சின்ஹா தலைமையிலான நாடாளுமன்றக் குழுவின் முன் தங்கள் அறிக்கைகளை கொடுத்திருந்தனர்.
நிதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு தொழிற்துறையினரிடம், க்ரிப்டோ நிதி குறித்த நிபுணர்களுடனும் கடந்த நவம்பர் 15 அன்று பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் க்ரிப்டோ பணப் பரிவர்த்தனையைத் தடை செய்யாமல், அதனை ஒழுங்குபடுத்துவது குறித்து பேசப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.`க்ரிப்டோ வர்த்தம் ஒழுங்குமுறைக்குள் கொண்டுவரப்பட வேண்டும் என்று பல தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். எனினும் தொழில்துறை நிறுவனங்கள், பங்குதாரர்கள் தரப்பில் யார் ஒழுங்குமுறைப்படுத்துவது என்ற கேள்வி எழுந்துள்ளது’ எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.