ஒவ்வொரு மாதமும் பொருளாதார ரீதியான பல்வேறு நடவடிக்கைள் காரணமாக விலைவாசி ஏற்றமும், இறக்கமும் என பல்வேறு நடவடிக்கைககள் இருக்கும். 

அந்த வகையில், பிப்ரவரி மாதமான இந்த மாதம் பல்வேறு மாற்றங்கள் உருவாகியுள்ளது. 6 முக்கிய மாற்றங்களை கீழே காணலாம்.

1. சிகரெட் விலை உயர்வு:

ஜிஎஸ்டி மாற்றம் காரணமாக இந்தியா முழுவதும் இன்று சிகரெட் விலை உயர்ந்துள்ளது. புகையிலைப் பொருட்கள், பான்மசாலா, கைனி, குட்கா போன்ற பொருட்கள் மீதான ஜிஎஸ்டி 40 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதன் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. சிகரெட்டின் உயரத்திற்கு ஏற்ப ரூபாய் 2.05 முதல் ரூபாய் 8.50 வரை உயர்ந்துள்ளது. 

 2. ஃபாஸ்டேக்கிற்கு KYV வெரிஃபிகேஷன் தேவையில்லை: புதிய கார்கள், ஜீப் மற்றும் வேன்களுக்கு ஃபாஸ்டேக் அட்டை வாங்குவதற்கு இனிமேல் Know Your Vehicle என்ற சரிபார்ப்புத் தேவையில்லை. 

3. சிலிண்டர் விலை உயர்வு:

இன்று முதல் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 19 கிலோ கொண்ட சிலிண்டர் விலை ரூபாய் 50 உயர்த்தப்பட்டுள்ளது. இன்ற ரூபாய் 1899.50 உயர்த்தப்பட்டுள்ளது. 

4. வட்டி குறைவு:

ரிசர்வ் வங்கி வரும் பிப்ரவரி 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை நடக்கிறது. இந்த கூட்டத்தில் வட்டியை குறைக்கும் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 0.25 சதவீதம் முதல் 5 சதவீதம் வரை இந்த வட்டி குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பு வந்தால் கடனுக்கான வட்டி விகிதம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

5. குறையப்போகும் விமான டிக்கெட்டுகள்:

எண்ணெய் நிறுவனங்கள் விமானத்திற்கான எரிபொருள் கட்டணம் இந்த பிப்ரவரி மாதம் குறையும் என்று கருதப்படுகிறது. கிலோலிட்டருக்கு ரூபாய் 1000 குறையும் என்று கருதப்படுகிறது. அவ்வாறு குறைந்தால் விமான நிறுவனங்கள் தங்களது கட்டணத்தை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

6. நிலங்கள் வாங்க, விற்க ஆதார் அவசியம்:

உத்தரபிரதேசம் மற்றம் கர்நாடகம் ஆகிய 2 மாநிலங்களில் இன்று முதல் நிலங்கள் வாங்க மற்றும் விற்க ஆதார் அட்டை அவசியமாகிறது. இதற்கு பிறகு நிலம் வாங்குவதற்காகவும், விற்பதற்காகவும் பதிவு செய்யும் போது, ​​வாங்குபவர்கள், விற்பவர்கள் மற்றும் சாட்சிகள் ஆகியோர் சார் பதிவாளர் அலுவலகத்தில் உள்ள பயோமெட்ரிக் இயந்திரத்தில் கைரேகை அல்லது முக அங்கீகாரம் மூலம் தங்கள் அடையாளத்தை சரிபார்க்க வேண்டும்.

LPG Cylinder Price Hike: பட்ஜெட் தாக்கலுக்கு முன் வந்த அதிர்ச்சி.! சமையல் கேஸ் விலை திடீர் உயர்வு- எவ்வளவு தெரியுமா.?

Nirmala Sitharaman Saree: பட்ஜெட்டை விட அதிக கவனம் பெறும் நிர்மலா சீதாராமன் சேலை.. என்ன அர்த்தம் தெரியுமா?