வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO, WHATS APP-இல் சேவையை தொடங்கியுள்ளது. இச்சேவையின் மூலம் கணக்குதாரர்களுக்கு PF இருப்புத்தொகை மற்றும் பாஸ்புக் விவரங்களை பெறமுடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

நொடிப்பொழுதில் PF விவரம்! 

PF விவரங்களை பெற அலுவலகங்களை அணுகாமல், இணையதளத்தில் நீண்ட நேரம் செலவிடாமல் எளிதில் கணக்குதாரர்கள் விவரங்களை பெறும் நோக்கில் இச்சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 8796441800 என்ற EPFO -வின் வாட்ஸ்அப் எண்ணுக்கு 'Hi' குறுஞ்செய்தி அனுப்புதன் மூலம் CHAT-ஐ தொடங்கி மொழி உள்ளிட்ட சில விருப்பத்தேர்வுகளை உள்ளிட வேண்டும். இதனையடுத்து நாம் பெற நினைக்கும் இருப்புத்தொகை, பாஸ்புக் விவரங்களை தேர்வு செய்வதோடு ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு வரும் OTP-ஐ உள்ளிடுவதன் மூலம் நாம் தரவுகளை எளிதில் பெற முடியும்.

Continues below advertisement

 

முழு வசதிகளையும் பெற முடியுமா?

இணையதள வளர்ச்சிக்கு பின்னர்,அலுவலகத்திற்கு நேரடியாக சென்று PF குறித்தான விவரங்களை பெறுவதில் இருந்து விலக்களித்து, EPFO-வின் அதிகாரப்பூர்வ வலைதளம் மூலமாக தரவுகளை பெற முடிந்தது. PF விவரங்களை பெறுவதற்கும், கணக்கிலிருந்து பணம் எடுக்கும் வசதிக்கு EPFO-வின் இணையதளம் பிரதான பயன்பாடாக இருந்ததில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது இருந்தபோதிலும் பயன்பாட்டை மேலும் எளிமையாக்கும் வகையில் இந்த WHATS APP வழிச்சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 இப்பயன்பாட்டில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இப்புதிய வசதி அடிப்படை தகவல்களை மட்டுமே வழங்கி வருகிறது. இந்நிலையில் க்ளைம் செட்டில்மென்ட்,பணம் எடுத்தல் அல்லது சுயவிவரத் திருத்தங்கள் உள்ளிட்ட சேவைகளுக்கு EPFO-வின் அதிகாரப்பூர்வ வலைதளத்தையே அணுக வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.