TN Govt Loan: ரூ.50 லட்சம் வரை கடன், 50% மானியம், 3% மட்டுமே வட்டி - தகுதிகள் என்ன? வாரிக் கொடுக்கும் தமிழ்நாடு அரசு

TN Govt livestock farms Loan: கால்நடை பண்ணைகள் அமைத்திட ரூ.50 லட்சம் வரை கடன் வழங்கும், தமிழ்நாடு அரசின் திட்டம் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Continues below advertisement

TN Govt livestock farms Loan: தமிழ்நாடு அரசு மானியத்தில் கால்நடை பண்ணை அமைத்திட தொழில்முனைவோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

தமிழ்நாடு அரசின் கடன் திட்டம்:

தமிழ்நாட்டில் கால்நடைகளின் எண்ணிக்கையினை உயர்த்திடவும். தொழில்முனைவோர்ககளை உருவாக்கிவிடவும் புதிய கால்நடை பண்ணைகள் அமைப்பதற்க்கு 2021 - 2022 ஆம் நிதியாண்டில் இருந்து அரசு நிதி உதவி வழங்கி தொழில்முனைவோர்களை ஊக்குவித்து வருகின்றது.

புதிய கோழிபண்ணைகள், செம்மறியாடு மற்றும் வெள்ளாடு பண்ணைகள், பன்றி பண்ணைகள் உருவாக்குவதின் வழி மாநிலத்தின் இறைச்சி, மற்றும் முட்டை உற்பத்தி அதிகரிப்பது மற்றும் புதிய வேலை வாய்ப்புகளை அதிகரிக்க இலக்காக கொண்டு திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.

ரூ.50 லட்சம் வரை கடன்

இத்திட்டத்தின் கீழ் தீவனம், தீவன்பயிர் சேமிப்பு, தீவன விதைகள் உற்பத்தி, கோழி வளர்ப்பு, செம்மறியாடு வளர்ப்பு, வெள்ளாடு வளர்ப்பு மற்றும் பன்றி வளர்ப்ப பண்ணைகள் அமைந்து தொழில் முனைவோரை உருவாக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் நாட்டு கோழி பண்ணையுடன் கூடிய குஞ்சு பொரிப்பகம் அமைக்க ரூ.25.00 லட்சம் வரையும், செய்மறி ஆடு / வெள்ளாடு பண்ணை அமைக்க ரூ. 10.00 லட்சம் முதல் ரூ. 50.00 லட்சம் வரையும், பன்றி வளர்ப்பு பண்ணை அமைக்க ரூ. 15.00 வட்சம் முதல் ரூ. 30.00 வட்சம் வரையும், வைக்கோல், ஊறுகாய்புல், மொத்த கலப்பு உணவு (TMR), தீவன தொகுதி, மற்றும் தீவன சேமிப்பு வசதிகள் பண்ணையம் அமைத்திட தொழில்முனைவோருக்கு மானியம் வழங்கபடுகிறது. 

யாருக்கு கடன் கிடைக்கும்?

இத்திட்டத்தில் தனி நபர், சுய உதவி குழுக்கள் (SHG), விவசாய உற்பத்தியாளர்கள் அமைப்புFPO), விவசாய கூட்டுறவுகள், கூட்டு பொறுப்பு சங்கங்கள் (ULG) பிரிவு 8 நிறுவனங்கள் விண்ணபிக்க தகுதியானவர்கள் ஆவர்.

விண்ணப்பிப்பது எப்படி?

இத்திட்டத்தில் பயன் பெற விரும்புவோர்கள் https//nim.vdyamimitra.in/என்கிற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இத்திட்டம் தொடர்பான முழுமையான தகவல்களை http://www.tnida.tn.gov.in/ என்கிற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இத்திட்டத்தில் விண்ணப்பிக்க தேவையான விரிவான கிட்ட அறிக்கையினை விண்ணப்பதாரர்கள் http://www.tnlda.tn.gov.in/ என்கிற இணையதளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

வட்டி விகிதம்:

கடன்களுக்கான வட்டி விகிதங்கள் கடன் வழங்கும் வங்கியைப் பொறுத்தது. அதேநேரம் மத்திய அரசு ஒகடன்களுக்கு 3% வட்டி மானியம், தகுதியுள்ள நிறுவனங்கள் திட்டச் செலவில் 90% வரைகடன்களைப் பெற அனுமதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மூலதன மானியம்

கோழிப்பண்ணை, செம்மறி ஆடு வளர்ப்புப் பண்ணை, பன்றி வளர்ப்புப் பண்ணை, தீவன மதிப்பு கூட்டல் (அதாவது வைக்கோல்/சிலேஜ்/மொத்த கலப்பு ரேஷன் (TMR)/தீவனத் தொகுதி) அலகு மற்றும் சேமிப்புப் பிரிவு உள்ளிட்ட கிராமப்புற கோழிப் பண்ணைகளை நிறுவுவதற்கு 50% மூலதன மானியம் வழங்கப்படுகிறது. பல்வேறு கூறுகளுக்கான அதிகபட்ச மானிய உச்சவரம்பு ரூ. 25.00 லட்சத்திலிருந்து ரூ. 50.00 லட்சம் வரை மாறுபடும்.

தேவையான ஆவணங்கள்:

  • திட்டத்தில் விண்ணப்பதாரரின் பங்கின் சான்று
  • விண்ணப்பதாரரின் முகவரி சான்று
  • 3 ஆண்டுகள் தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை (நிறுவனமாக இருந்தால்)
  • கடந்த 3 ஆண்டுகள் வருமான வரி வருமானம்
  • கடந்த 6 மாதங்களுக்கான வங்கி அறிக்கை
  •  பான்/ஆதார் அட்டை
  • சாதிச் சான்றிதழ் (பொருந்தினால்)
  • பயிற்சிச் சான்றிதழ்
  • அனுபவச் சான்றிதழ்
  • ஸ்கேன் செய்யப்பட்ட புகைப்படம்
  • ஸ்கேன் செய்யப்பட்ட கையொப்பம்

கூடுதல் விவரங்களுக்கு..!

மேலும் விவரங்கள் அறிய அருகில் உள்ள கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை மருத்துவர்கள், மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்கள், அருகில் உள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவன அலுவலர்கள் மற்றும் தமிழ் நாடு கால்நடை மேம்பாட்டு முகமை, சென்னை அலுவலர்களை தொடர்பு கொள்ளவும்.

Continues below advertisement