தூத்துக்குடியில் இருந்து நேரடி கப்பல் சேவை - திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை

துறைமுக கடல் பகுதியை ஆழப்படுத்தி, துாத்துக்குடிக்கு பெரிய கப்பல்கள் நேரடியாக வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Continues below advertisement

பெரிய கப்பல்கள் வந்துசெல்லும் வகையில் துாத்துக்குடி துறைமுகத்தை மேம்படுத்த வேண்டும் என திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Continues below advertisement


திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்கள், பின்னலாடை ரகங்களை, வெளிநாடுகளுக்கு கடல் வழியே ஏற்றுமதி செய்கின்றன. இதற்கு, துாத்துக்குடி மற்றும் கொச்சி துறைமுகங்களையே, திருப்பூர் நிறுவனங்கள் அதிகம் பயன்படுத்தி வந்தன. தூத்துக்குடி துறைமுகத்துக்கு அனுப்பப்படும் சரக்குகள், சிறிய கப்பல்களில் ஏற்றப்பட்டு, கொழும்பு சென்று, அங்கு பெரிய கப்பலுக்கு மாற்றப்பட்டு, வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகிறது. கொரோனாவுக்கு பின்னர் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட கொழும்பு துறைமுக செயல்பாடுகள் மந்தமாகியுள்ளன. இதனால், சரக்குகள் வெளிநாடுகளை சென்றடைய தாமதமாகிறது. திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கூறும்போது, தூத்துக்குடி துறைமுகத்துக்கு அனுப்பும் சரக்குகள், கொழும்புவை அடைந்து, பெரிய கப்பல்களில் ஏற்றப்படுவதற்கு, இரண்டு வாரத்துக்கு மேலாகிறது. சீசனுக்காக தயாரிக்கப்படும் ஆடைகள், குறிப்பிட்ட நாட்களுக்குள் வெளிநாட்டைச் சென்றடைவது அவசியம். தாமதத்தை வெளிநாட்டு வர்த்தகர்கள் விரும்புவதில்லை.


திருப்பூரின் 90 சதவீத சரக்கு போக்குவரத்துக்கு கைகொடுத்துவந்த தூத்துக்குடி துறைமுகத்தை புறக்கணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையில் போதுமான சரக்கு ஏற்றப்பட்டால், பல பெரிய கப்பல்கள் கொச்சி துறைமுகத்தை புறக்கணித்து விடுகின்றன. திருப்பூரிலிருந்து 250 கி.மீ துாரத்தில் கொச்சி துறைமுகம், 330 கி.மீல் துாத்துக்குடி துறைமுகங்கள் இருந்தாலும், இந்த துறைமுகங்களை பயன்படுத்துவதில் சிக்கல்கள் உள்ளன. விரைவில் சரக்கை அனுப்ப, 500 கி.மீ தொலைவில் உள்ள சென்னை துறைமுகத்தை நாட வேண்டியுள்ளது; செலவும் அதிகரிக்கிறது.


திருப்பூரிலிருந்து 70 சதவீத பின்னலாடைகள், சென்னை துறைமுகம் வாயிலாகவே அனுப்ப வேண்டியுள்ளது. தூத்துக்குடி துறைமுக அதிகாரிகளின் அலட்சியமும், தொலைநோக்கு பார்வையில்லாததும், தமிழக ஏற்றுமதி, இறக்குமதியாளர்களை பாதிக்க செய்கிறது. எனவே, துறைமுக கடல் பகுதியை ஆழப்படுத்தி, துாத்துக்குடிக்கு பெரிய கப்பல்கள் நேரடியாக வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். கொழும்பு துறைமுகத்தை நம்பியே இருப்பதால் அன்னிய செலாவணி பாதிக்கப்படும் என கூறும் இவர்கள், தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து ஐரோப்பிய நாடுகள், மேற்கத்திய நாடுகளுக்கு நேரடி கப்பல் சேவை அவசியம் இதனால் கால நேரமும் மிச்சப்படும் என்கின்றனர்.


துறைமுகத்தில் உள்ள 1 முதல் 4 வரையிலான சரக்கு தளங்களை ரூ.2455.40 கோயில் சரக்கு பெட்டக தளங்களாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணிகள் 2025 டிசம்பரில் முடிவடையும். இதனை தவிர ரூ.7500 கோடியில் வெளித்துறைமுக விரிவாக்க திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இந்த திட்டத்தை 2030-ல் முடிக்க திட்டமிட்டு உள்ளதாக தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில்  என துறைமுக ஆணையம் தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

Continues below advertisement
Sponsored Links by Taboola