Cryptocurrency | 'கிரிப்டோகரன்சியை இந்தியாவில் சட்டப்பூர்வமாக்கக்கூடாது' என மறுக்கும் மக்கள் எத்தனை சதவிகிதம்? ஏன்?

இந்தியாவில் கிரிப்டோகரன்சியின் அடிப்படை தொழில்நுட்பத்தையும் அதன் பயன்பாடுகளையும் மேம்படுத்த சில விதிவிலக்குகளை அனுமதிக்கிறோம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement

டிஜிட்டல் பரிவர்த்தனைகளான கிரிப்டோகரன்சியை இந்தியாவில் சட்டப்பூர்வமாக நடைமுறைக்குக் கொண்டுவருவதற்கு 50 சதவீதத்திற்கு மேற்பட்ட இந்தியர்கள் விரும்பவில்லை என கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

Continues below advertisement

கிரிப்டோகரன்சி என்ற வார்த்தை சமீப காலங்களாக அனைவரும் அதிகளவில் கேட்டுவருகிறோம். இது டிஜிட்டல் தளத்தில் பொருள்கள் மற்றும் சேவைகளைப்பெற உதவும் பணமாக செயல்பட்டுவருகிறது. கிரிப்டோகரன்சி மூலம் ஒரு சில நிறுவனங்கள் தங்களின் பொருள்கள் மற்றும் சேவைகளைப் பணமாக்குவதற்கு கிரிப்டோகரன்சியைப் பெற்றுக்கொள்ள சம்பாதிக்கின்றனர். இதோடு இந்த பிட் காயின்களை மற்றவர்களிடம் விற்க முடியும். இந்த பணபரிவர்த்தனைகள் அனைத்திற்கும்  பொது ரிஜிஸ்டரைப் பயன்படுத்துவதால் அதிக வெளிப்படைத்தன்மை உள்ளது. அதாவது யாரை வாங்குகிறார்கள்? யார் விற்கிறார்கள் என்ற தெரிந்துகொள்ள முடியும். மற்றும் இந்தவித கரன்சியில் எந்த நாட்டின் ரிசர்வ் வங்கியும் இதில் தலையிடாது என்பதால் இதன் மதிப்படை பணவீக்கம் வந்தாலும் குறைக்க முடியாது என நிலை உள்ளது.

இந்த சூழலில் தான் கிரிப்டோன்சி இந்தியாவில் சட்டப்படி அனுமதிக்கப்படுமா? என்ற கேள்வி அதிகளவில் எழுந்த நிலையில் தான் மத்திய அரசு இதனை அங்கீகரித்தது. இதோடு மட்டுமின்றி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நிதிக்குழுமை பிரதமர் அமைத்துள்ளார். மேலும் வருகின்ற குளிர்கால கூட்டத்தொடருக்கு முன்னாள் அனைத்து அமைச்சர்களின் ஒப்புதல் பெற்று நிறைவேற்றப்படலாம் என்ற தகவல் அதிகளவில் எழுந்துவருகிறது. இந்நிலையில் தான் கிரிப்டோகரன்சி குறித்து கடந்த 15 நாள்களில் 56 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவு ஒன்று வெளியாகியுள்ளது. அதில் இந்தியாவில் 54 % மக்கள் கிரிப்டோகரன்சியை சட்டப்பூர்வமாக்குவதற்கு விரும்பவில்லை எனவும், மற்ற நாடுகளில் வைத்திருக்கும் டிஜிட்டல் சொத்தைப்போல வரி விதிக்க வேண்டும் என்று கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இதில் 26 சதவீத மக்கள் கிரிப்டோகரன்சியை சட்டப்பூர்வமாக்கப்பட வேண்டும் என்பதோடு இந்தியாவில் வரி விதிக்கப்பட வேண்டும் என்று கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் பலர் இதில் முதலீடு செய்துள்ள நிலையில், இதற்கான வலுவான கட்டமைப்பு இல்லாதமையால் முதலீட்டாளர்களுக்கு அதிக பாதிப்பினைத்தருகிறது. எனவே 71 சதவீத மக்கள் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்வதில் நம்பிக்கை இல்லாமல் உள்ளதாக Local Circles -இன் தலைமை நிர்வாக அதிகாரி சச்சின் தபாரியா கூறியுள்ளார்.

இதோடு BuyUcoin இன் தலைமை நிர்வாக அதிகாரி சிவம் தக்ரால் தெரிவிக்கையில், ”நிச்சயம் இந்திய அரசு கிரிப்டோகரன்சிக்கு சட்டப்பூர்வமாக அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக” தெரிவித்துள்ளார். இந்தியாவில் ”கிரிப்டோ சொத்துக்களை ஒழுங்குபடுத்துவதில் நுணுக்கமான அணுகுமுறை எடுக்குமாறு இந்திய அரசைக் கேட்டுக்கொள்கிறோம்” என்று கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் OKEx.com இன் CEO ஜெய் ஹாவ் என்று தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் பல தொழில்நுட்ப வளர்ச்சியை இந்தியா பெற்றுக்கொள்ளும் எனக் கூறப்பட்டுள்ளது.  இருந்தபோதும் கிரிப்டோகரன்சி வெளிப்படையாக நடைபெறுவதால் மக்கள் இதில் எந்தவித பாதுகாப்பும் இல்லை என மக்கள் இதனை சட்டப்பூர்வமாக்குவதற்கு எதிர்ப்புகளைத் தெரிவிக்கின்றனர்.  இந்த சூழலில் தான், கிரிப்டோகரன்சியின் அடிப்படை தொழில்நுட்பத்தையும் அதன் பயன்பாடுகளையும் மேம்படுத்த சில விதிவிலக்குகளை அனுமதிக்கிறோம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola