2024ஆம் ஆண்டுக்கு புத்தாண்டு கொண்டாட்டத்தில் அனைவரும் இருக்கும்போது, மத்திய அரசு சிலிண்டர் விலையைக் குறைத்துள்ளது. அதாவது 19 கிலோ கிராம் எடை கொண்ட வணிக சிலிண்டர் விலையில் ரூபாய் 4.50 குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ரூபாய் 1,929க்கு விற்பட்டு வந்த வணிக சிலிண்டர் விலை தற்போது ரூபாய் 1,924.50 க்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஏற்கனவே கடந்த வார தொடக்கத்தில் அதாவது டிசம்பர் 22ஆம் தேதி, ரூபாய் 39.50 குறைப்பட்ட நிலையில், புத்தாண்டில் மேலும் ரூபாய் 4.50 குறைக்கப்பட்டுள்ளது வணிகர்களுக்கு புத்தாண்டில் ஒரு ஸ்வீட் நியூஸாக கருதப்படுகின்றது.
வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் நாடு முழுவதும் மக்களவை பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதன் காரணமாகவே இந்த திடீர் விலை குறைப்பு என்று கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 20 மாதங்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலையிலும் எந்த ஒரு மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த தமிழ்நாட்டில் பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளில் சமையல் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்துகின்றனர். தமிழ்நாட்டில் மானியம் இல்லாத எல்பிஜி சிலிண்டர்களின் விலை ₹ 918.50 . இவை ஒவ்வொரு மாதமும் இந்திய அரசால் நிர்ணயம் செய்யப்படுகின்றது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் போன்றவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலையை தினமும் எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணையித்துக்கொள்ள முடியும். ஆனால் பெட்ரோல் டீசல் விலை கடந்த 20 மாதங்களுக்கு மேலாக எந்த வித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்படுகின்றது. அதேபோல், சமையலுக்கு விற்பனை செய்யப்படும் சிலிண்டர் மற்றும் வணிக சிலிண்டர் விலையை மாதத்தின் முதல் நாள் அல்லது 16ம் தேதி அன்று மாற்றி அமைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் அடிப்படையில் ஜனவரி மாதத்தின் முதல் நாளான இன்று வணிக சிலிண்டர் விலையில் ரூபாய் 4.50 குறைக்கப்பட்டுள்ளது.