இந்தியாவின் ரியல் - எஸ்டேட் தொழிலுக்கான அமைப்பின் ஓர் அங்கமான இந்திய ரியல் எஸ்டேட் சங்க மேம்பாட்டுக் கூட்டமைப்பு கிரெடாய்), அரசு முதலீட்டார்கள். வணிக நிறுவனங்கள், வாடிக்கையாளர்களுடன் இயங்கி வருகின்றது. இந்தியாவின் ரியல் - எஸ்டேட் துறையை மேம்படுத்த இந்த அமைப்பு இயங்கி வருகின்றது.






இந்த அமைப்பு அண்மையில் credai365.com&credaibuildmart365.com என்ற இரண்டு புதிய இணையதளங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த இணையதளங்களை.தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள், ஜூலை 30-ம் தேதி தொடங்கி வைத்தார்.


credai365.com இணையதளம், இந்தியாவிலேயே முதல் முறையாக வாட்ஸ்-அப் செயலியோடு நேரடியாக தொடர்பு கொள்ளக்கூடிய வகை இணையதனம் ஆகும் உங்களது கனவு இல்லங்களை பெற்று கொள்ள வாடிக்கையாளரையும், கிரெடாய் விற்பனையாளர்களையும் தொடர்பில் இணைக்கும்.


credaibuildmart365.com இணையதளத்தை பொருத்தவரை, வீடு வாங்குவது தொடர்பான அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய ஒரே இணையதளமாக இது அமையும் வழக்கறிஞர்கள் டிசைன், வடிவமைப்பாளர்கள், டீலர்கள் என அனைவரது தொடர்புகளையும் இதில் காணலாம்.


15680 கோடி ரூபாய் மதிப்பிலான வணிக வியாபாரமானது, MSME தொடர்பான டீலர்கள், உற்பத்தியாளர்கள், சேவைகள், வழக்கறிஞர்கள், டிசைன் வடிவமைப்பாளர்கள் என அனைவரையும் ஒன்றிணைக்கும் ஓர் முயற்சி குறிப்பாக கொரோனா பரவல் காலத்தில் வியாபாரத்தை சீராக உருவாக்கப்பட்டுள்ள ஆன்லைன் வகை வணிக வியாபாரமாக செயல்படும்.


இரண்டு இணையதளங்களும், வாட்ஸ் அப் சேவையோடு தொடர்பு கொள்ள கூடிய வகையில், கேள்வி பதில் சேவைகள் அடங்கிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது,


இது குறித்து பேசிய கிரெடாய் சென்னையின் தலைவர் படம் டுகார், 'கொரோனா காலத்தில், கிரெடாய் சார்பில், தமிழ்நாடு முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு 4.5 கோடி ரூபாய் மற்றும் 800 ஆக்சிஜன் வசதிகள் கொண்ட படுக்கைகள் அளிக்கப்பட்டது. இந்த உபகரணங்கள் கீழ்பாக்கம் ஓமந்தூர், ராயப்பேட்டை, அண்ணாநகர் மற்றும் ஸ்டான்லி மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட்டது. மதிப்பிற்குரிய தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்களோடு கைக்கோர்த்து கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுவது பெருமை அளிக்கிறது. இந்தச் சூழலில், கிரெடாய் சார்பில் இரண்டு புதிய வணிக இணையதளங்களை அறிமுகம் செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது." என்றார்.


தற்போதைய நிலவரப்படி. 7,5 கோடி மதிப்பிலான கட்டுமான திட்டங்களை கிரெடாய் மேற்கொண்டு வருகின்றது. அதுமட்டுமின்றி சென்னையில் கட்டக்கூடிய ஒவ்வொரு 100 வீடுகளில் 88 வீடுகள் கிரெடாய் நிறுவனத்தால் கட்டப்படுகின்றது.